உலகம் டெக்னாலஜியால் ஆளப்பட்டு வரும் இன்றைய சூழலில், எவருக்கு சந்தேகம் வந்தாலும் விடைதேடுவது கூகுளிடம்தான். உடனடியாக பதில் தரும் அதிவேக செர்ச் என்ஜின்! அதைவிட அதிவேகமாக கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நம் சத்குருவுடன் கூகுள் தலைமைச் செயலகத்தில் ஒரு சந்திப்பு நடந்தது.

கூகுள் சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்ட சத்குரு, "கூகுள் நிறுவனத்தில், 'அனைவரையும் இணைத்துக் கொள்ளுதல்' எனும் தலைப்பில் உரையாற்றினேன். கூகுள் இவ்வுலகிற்கு தகவல் களஞ்சியமாய் விளங்குகிறது. அது ஆனந்தத்தின் களஞ்சியமாகவும் மாறட்டும்," என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமைச் செயலகத்திற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு அவர்கள் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். யோகி, ஞானி, சமூக ஆர்வலர், கவிஞர், தொலைநோக்குப் பார்வையாளர் என பன்முகம் கொண்ட சத்குரு அவர்கள் இதுபோன்ற பல மாநாடுகளில், பல சந்திப்புகளில் உரையாற்றி இருப்பவர்.

"அனைவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளுதல்," என்ற தலைப்பில் சத்குரு அவர்கள் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில், கூகுளின் துணைத் தலைவர், கூகுளின் உயர் அதிகாரிகள் மற்றும் கூகுளின் இளம் பணியாளர்கள் கூடியிருந்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் வீடு, பணியிடங்கள், மற்றும் நமது சமூகத்தில் இந்தப் பண்பு எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதைப் பற்றி சத்குரு பேசினார். தான் மட்டுமே வளர்ந்திட வேண்டும் என்ற பொதுவான உணர்விலிருந்து அனைவரின் நலனுக்காகவும் பணியாற்றிடும் உணர்வினை வளர்ப்பதற்குத் தேவையான சில நடைமுறைக் கருவிகளைப் பற்றியும் சத்குரு உரையாற்றினார்.

ஆனால், அனைவரையும் இணைத்துக் கொள்வதில் பல சவால்களும் இருக்கத்தான் செய்கிறது. இதைப்பற்றி கூகுள் அதிகாரிகள் சத்குருவிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை தொடுத்தனர். அவையனைத்திற்கும் பதிலளித்த சத்குரு எளிமையான, அறிவியல்பூர்வமான கருவிகளைக் கொண்டு மனிதர்களின் உள்நிலையில் மாற்றம் கொண்டு வருவதே இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்பதை மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதித்துச் சென்றார்.

கூகுள் சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்ட சத்குரு, "கூகுள் நிறுவனத்தில், 'அனைவரையும் இணைத்துக் கொள்ளுதல்' எனும் தலைப்பில் உரையாற்றினேன். கூகுள் இவ்வுலகிற்கு தகவல் களஞ்சியமாய் விளங்குகிறது. அது ஆனந்தத்தின் களஞ்சியமாகவும் மாறட்டும்," என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

சத்குரு அவர்களின் ஆங்கில உரையை இங்கே காணலாம்.


சத்குரு அவர்களை டிவிட்டரில் தொடருங்கள்: @SadhguruJV