ஜெயலட்சுமி சென்னையில் வாழ்பவர். மீனம்பாக்கம் கேந்திரிய வித்யா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புற்றுநோயிலிருந்து தான் மீண்ட சிலிர்ப்பான கதையை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

"எங்களால முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யறோம்... நீங்க முன்னாடியே வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்!” டாக்டர் இப்படிச் சொன்னதைக் கேட்டதுமே, பலவித சிக்கல்களில் உள்ள தனது வாழ்க்கை மேலும் கடுமையாகியுள்ளது என்பதை ஜெயலட்சுமி உணர்ந்து கொண்டார்...! அவர் பயப்படவில்லை. அவருக்கு துணையாய் ஒன்று நிச்சயம் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். என்ன அது?

2017 ஜனவரி 8 அன்று காலை 9 மணிக்கு முன், எனக்கு மூச்சு இரைத்தது. எனக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லை. கவனமெல்லாம், “நான் ஓடுகிறேன்” என்பதில்தான் இருந்தது. முதிர்ந்த இந்த 66 வயதில், நான் ஈஷா வித்யா பள்ளி குழந்தைகளுக்காக மாரத்தான் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன். எல்லைக் கோட்டினை நான் கடந்த அடுத்த கணத்தில், நான் ஒரு ஆழமான சுவாசத்தை எடுத்து அப்படியே தரையில் அமர்ந்தேன். அப்போது மூச்சு இரைத்ததால் நுரையீரல் வெடித்துவிடும் போன்ற உணர்வுடன் இருந்தாலும், கூடவே மகிழ்ச்சியிலும் பெருமையிலும் எனது இதயம் கூட வெடித்து விடுவதுபோல உணர்ந்தேன்.

கடந்த ஆண்டு ஓட்டத்தைவிட தற்போது 20 நிமிடங்கள் முன்னதாக கடந்திருந்தேன். ஆனால், எனது இந்த எல்லையில்லாத ஆனந்தத்திற்கு இது மட்டுமே காரணமல்ல!

2004ம் ஆண்டு ஒரு ப்ளாஷ்பேக்

“ஜெயலட்சுமி... நீங்க தாமதமா வந்திருக்கீங்க!” எனது பயாஸ்பி பரிசோதனை அறிக்கையை பார்த்துவிட்டு வருத்தத்துடன் மருத்துவர் 2004ஆம் ஆண்டு சொன்னார். எனது 52வது வயதில், மார்பகப் புற்றுநோய் IIIC நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

 

புற்றுநோய் எனது கழுத்து எலும்பிற்கு கீழே உள்ள பாகங்களில் பரவி இருந்தது. “எங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறோம்... கொஞ்சம் முன்னதாக வந்திருக்கலாம்!” என மருத்துவர் சொன்ன வார்த்தைகள், புற்றுநோயின் தீவிரத்தை மறைமுகமாய் உணர்த்தியது. எனது இதயம் கணத்தது, இருந்தும் அதை உவகையுடன் ஏற்றுக் கொண்டேன். ஏற்கனவே பலவித சிக்கல்களில் இருந்த எனது வாழ்க்கை, இதனால் இன்னும் கடுமையாகும் என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கையில் கணவருடன் போராட்டம். இப்போது புதிதாய் மற்றும் ஒன்று. வேலை இழந்த விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு எனது கணவர் ஆளாகியிருந்தாலும், அவர் ஒரு அருமையான மனிதர்தான். உணர்வு நிலையில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருந்தேன். தீவிரமான மன அழுத்தத்திற்கும் ஆளாகி இருந்தேன். ஆனாலும், நான் தினமும் பயிற்சி செய்து வந்த சக்தி சலன க்ரியா என்னை இந்தப் பிரச்சனைகளிலிருந்து தொலைவுப்படுத்தியது.

புயல்வீசும் கடலில் தத்தளிக்கும் ஒரு மனிதன், கைக்கு சிக்கும் ஒரு மரக்கட்டையை எப்படி இறுகப் பிடித்துக் கொள்வானோ, அதைப் போல் நானும் யோகாவை இறுகப்பற்றிக் கொண்டேன்.

என்னை பாதித்திருந்த உயிர் வாங்கும் நோய் ஒருபுறம், இன்னொருபுறம் கணவருடனான பிரச்சனைகள். ஆனால், நான் பயந்துவிடவில்லை. ஒரு குழந்தை பள்ளியில், இன்னொரு குழந்தை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில், எனக்கு தெரிந்ததெல்லாம் நான் வாழ வேண்டும், என் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்பது மட்டுமே.

சிகிச்சைக்கான நேரம் குறிக்கப்பட்டது. முதற்கட்ட சிகிச்சையில், எனது மருத்துவர் 6 கீமோதெரபி பகுதிகளுக்கும், 21 கதிரியக்க சிகிச்சைகளுக்கும் திட்டமிட்டிருந்தார். கீமோதெரபி துவங்குவதற்கு முன் நான் யோகப் பயிற்சிகளை தவறாமல் செய்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தேன். இதனால், தினமும் இருவேளை பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

சக்தி சலன க்ரியா பயிற்சியை, சிகிச்சை துவங்குவதற்கு முன் ஒரு முறையும், மாலையில் மீண்டும் ஒருமுறையும் செய்வதாய் முடிவுசெய்து கொண்டேன். புயல்வீசும் கடலில் தத்தளிக்கும் ஒரு மனிதன், கைக்கு சிக்கும் ஒரு மரக்கட்டையை எப்படி இறுகப் பிடித்துக் கொள்வானோ, அதைப் போல் நானும் யோகாவை இறுகப்பற்றிக் கொண்டேன். யோகா எனக்கு வேலை செய்தது. எனது கற்பனைகளை எல்லாம் மீறி, மருத்துவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி, எனக்கு பலனளித்தது.

கீமோதெரபியின் ஒரு பகுதி முடிப்பதற்குள்ளாகவே, எனது கழுத்து எலும்பிற்கு கீழே இருந்த நோய் தாக்கம் காணாமல் போனது. அந்த சிகிச்சையின்போது சிறிது வலியும், தலைமுடி இழப்பும் தவிர வேறெந்த பக்க விளைவையும் நான் சந்திக்கவில்லை. இயல்பாக சாப்பிட்டேன், இயல்பாக தூங்கினேன். இரத்த அணுக்கள் குறைபாடு காரணமாக ஒருபோதும் கீமோ சிகிச்சையை தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இதே சிகிச்சையை மேற்கொண்டு வரும் பிற நோயாளிகளைப் பார்க்கையில், அவர்கள் வாந்தி, பசியின்மை, உடல் எடை குறைதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை உணர்ந்தேன். அவர்களுடன் ஒப்பிடுகையில், நான் நன்றாகவே இருந்தேன். கீமோ மற்றும் கதிரியக்க சிகிச்சையின்போது வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு தன்மை என்னைச் சுற்றிலும் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. நான்கு மாத காலத்திற்குள் சிகிச்சையை முடித்துக்கொண்டு, தினமும் 15 கி.மீ பயணம் செய்யவேண்டிய, ஆசிரியர் பணிக்கு திரும்பினேன்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், எனது மார்பக பகுதியில் ஒரு திடமான வீக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சைக்கு கட்டுப்படவில்லை. அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். Mastectomy எனும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன்.

ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்ல ஒரு மணிநேரம் இருக்கும் வரைகூட, யோகப் பயிற்சிகள் செய்தேன். நான் குணமடைந்து, உயிர் பிழைத்தது அற்புதமன்றி வேறில்லை. குளிர்கால விடுமுறைக்கு பின்னர் நான் பள்ளியில் ஜனவரி 2ல் மீண்டும் பணியில் சேர்ந்தேன். 2006 முதல் மருத்துவரை தொடர்ந்து பார்த்து வந்த நான், வருடம் ஒருமுறை மட்டுமே பார்த்தால் போதும் எனும் நிலை வந்தது.

12 ஆண்டுகள் Fast Forward

12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நான் இன்று இந்த அற்புதமான ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் 10 கி.மீ தூர மாரத்தான் ஓட்டத்திற்குப் பின்னர், அந்த வலி நிறைந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். 2007ல் இருந்து நான் மருந்துகள் அனைத்தையும் நிறுத்திவிட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. நான் ஈஷா யோகா வகுப்புகளில் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு புரிகிறேன்.

ஈஷா யோகா வகுப்புகளை ஒருங்கிணைப்பவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் பார்க்கும்போது எனக்கு திகைப்பு ஏற்படும். இதைச் செய்வதற்கு சம்பளம் வாங்குவார்களோ என்று சிறுபிள்ளைத்தனமாக நான் யோசித்ததுண்டு. 2011ல் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கான தீட்சையை எனது குழந்தைகளுடன் பெற்றபோதுதான், தன்னார்வத் தொண்டு புரியும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன். சத்குரு வழங்கும் அற்புத பயிற்சிகளால் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் என்னைப் போலவே ஏதோ ஒருவிதத்தில் தொடப்பட்டுள்ளனர் என்பதனால், ஈஷா வகுப்புகளுக்கு இவர்கள் துணை புரிகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

தன்னார்வத் தொண்டு தரும் பரவசத்தின் ருசியை நான் மெல்ல மெல்ல பருகத் துவங்கினேன். 2013ல் நிகழ்ந்த சென்னை மெகா வகுப்பு எனது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, எனது வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. என்னை நானே அடையாளம் கண்டுகொள்ள முடியாதவாறு மாறியிருக்கிறேன். புற்றுநோயிலிருந்து பிழைத்திருக்கிறேன். இந்த கொடிய நோய் என்னை தாக்குவதற்கு முன்பே நான் சிக்குண்டிருந்த துன்ப துயரங்களிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.

குடிப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த என் கணவர் இன்று, எனது அறுவை சிகிச்சைக்கு பிறகு, முழுவதுமாக ஈஷா தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டுள்ளார். எனது குழந்தைகளும் ஈஷாவுடன் ஈடுபாடு கொண்டு, ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

எனது வாழ்வை அற்புதமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றிய ஈஷாவிற்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனை ஆட்கொண்ட சத்குருவின் கருணைக்கும் அருளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

ஆசிரியர் குறிப்பு:  "சக்தி சலன கிரியா" ஈஷா யோகா மையத்தில் தியான அன்பர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. இந்த வகுப்பு செய்ய ஷாம்பவி வகுப்பு செய்திருக்க வேண்டும்.

அடுத்து வரும் ஷாம்பவி மஹாமுத்திரா - ஏழு நாள் ஈஷா யோகா வகுப்புகள் 

உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​