இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டுதான் உள்ளனர். சிலர் உணவிற்காக; சிலர் பணத்திற்காக; இன்னும் சிலர் வெற்றிக்காக. இங்கே, இவர்கள் யாருக்காக ஓடினார்கள்?! மேலே கூறியவற்றிலிருந்து மாறுபட்ட இந்த ஓட்டத்தைப் பற்றி சில வரிகளும் பகிர்தல்களும்!

"மாரத்தான் என்று சொன்னதுமே அதுக்கெல்லாம் ரொம்ப ப்ராக்டிஸ் பண்ணனும்! அது நமக்கு செட் ஆகாது," என்று சொல்லிவிட்டு இளைஞர்கள்கூட ஒதுங்கிக்கொள்ளும் இந்தக் காலத்தில், ஈஷா வித்யா குழந்தைகளின் கல்விக்காக பாண்டிச்சேரி, கடலூர், நெய்வேலி, விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 117 பேர் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று பாண்டிச்சேரி-ஆரோவில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
"நீங்க வைக்கிற ஒவ்வொரு அடியும் ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும்"

இதில் என்ன ஆச்சரியம் என்றால், கலந்துகொண்டவர்கள் யாவரும் உடலளவில் ஃபிட் இல்லாதவர்கள். பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டு போட்டிக்குத் தயாரான வீரர்கள் மத்தியில் ஈஷா வித்யா பள்ளியின் டீச்சர்கள், பள்ளிப் பணியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொண்டனர். அவ்வளவு ஏன்...! 60 வயதைத் தொட்ட ஈஷா வித்யா பள்ளியின் தலைமையாசிரியரும் அந்த 21 கி.மீ தூர ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட்டார்.


அது சரி...! இதில் குழந்தைகளின் கல்விக்கு எப்படி உதவி கிடைக்கும்?
என்று கேட்டபோது...

"ஈஷா வித்யாவில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்குங்கள் என்று நாங்கள் கேட்பதை விட, நாங்கள் இந்தக் குழந்தைகளின் கல்விக்காக ஓடுகிறோம்; எங்களை ஊக்குவித்து நன்கொடை அளியுங்கள் என்று கேட்கும்போது, எங்களின் உறுதியையும் நேர்மையையும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே குழந்தைகளுக்கு நன்கொடையை வழங்க முன்வருகிறார்கள்."

இப்படிக் கூறி, தான் மாரத்தானில் ஓடிய அனுபவத்தை தொடர்ந்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஈஷா வித்யா பள்ளியின் நிர்வாகி திருமதி.புஷ்பா.

டீச்சர்ஸ், staffs எல்லாம் பரவாயில்ல, ஸ்கூல் வேன் டிரைவர்ஸ், குழந்தைகளப் பாத்துக்கிற ஆயாம்மா இவங்கெல்லாம் ஏன் கலந்துகிட்டாங்க? அதுவும் அவங்க வாங்குற கம்மியான சம்பளத்தில 450 ரூபாய் கொடுத்து எப்படி போட்டிக்கு பதிவு செஞ்சாங்க?

ஈஷா வித்யா பள்ளி எப்படி-யாருக்காக இயங்கிகிட்டு இருக்குதுன்னு இங்க ஸ்கூல்ல இருக்குற எல்லாத்துக்கும் தெரியும். குழந்தைங்க கல்விக்காக அவங்க இந்த தொகையை அர்ப்பணிச்சிருக்காங்க. தன் இரண்டு குழந்தைகளையும் ஈஷா வித்யா பள்ளி மூலம் படிக்க வெச்சுகிட்டு இந்த ஸ்கூல்லயே வேலை பாக்குற ஆயாம்மா 'மலர்விழி' ஒன்னரை மணி நேரத்துல பந்தய தூரத்தக் கடந்து, எங்க எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சாங்க. ஸ்காலர்ஷிப் வாங்குற மாணவர்களுக்காக வசதிபடைத்த வீட்டு மாணவர்கள் மாரத்தான்ல கலந்துகிட்டத இங்க சொல்லியே ஆகணும். அவங்களோட இந்த சின்ன வயசிலயே அடுத்தவங்களுக்கு உதவுற மனப்பான்மையை பாராட்டாம இருக்க முடியல.
8

எல்லாத்துக்கும் மேல என்னால எப்படி இந்த 21 கி.மீ தூரத்த கடக்க முடியும் என்ற கேள்வி என்ன பயமுறுத்திக்கிட்டே இருந்தது. 18வது கி.மீ வந்தப்போ நான் ரொம்ப சோர்ந்துட்டேன். சரி... இதோட விலகிடுவோம்னு நெனச்சப்போ, அங்க ஒரு மரத்தில் இருந்த ஈஷா வித்யாவோட வாசகம் தாங்கிய ஒரு போர்ட பார்த்தேன். மாரத்தான்ல ஓடுறவங்களுக்காக சத்குரு அனுப்பிய மெசேஜ்ஜ அதில எழுதியிருந்தாங்க.

"நீங்க வைக்கிற ஒவ்வொரு அடியும் ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும்"

இதப் படிச்சதுக்கப்புறம் மிச்சமிருந்த தூரத்த எப்படிக் கடந்தேன்னு எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சக்தி என்னை ஓடச் செய்தது," என விவரிக்கும் இவர்களது நெஞ்சங்களில் உள்ள அந்த ஊக்கம், குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற பேரார்வம் நம் கண்களை நனைக்கிறது.