இதுபோன்ற ஓர் இக்கட்டான நெருக்கடி காலங்களில்தான் உன்னதமான மனிதர்கள் மற்றும் பல்வேறு தன்னலமற்ற அமைப்புகளின் தொண்டுள்ளம் வெளி உலகிற்கு தெரியவரும் வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக கேரளத்தில் உள்ளூர் மீனவர்கள் மீட்புப் பணியில் பெரும் பக்கபலமாக இருந்தனர். இத்தகைய மனிதர்கள் இந்த செயல்களுக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

வள்ளுவர் இந்த குறளில் கூறுவதுபோல், கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

kerala-peridar-meetpu-pani-sgtweet-army

கேரள மாநிலத்தின் அந்த மோசமான தருணத்தில் கைகொடுக்க ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் தவறவில்லை!

கேரள மாநிலத்தில் என்ன நடந்தது?

கடந்த இரண்டு மாதங்களாகவே கேரளா வரலாறு காணாத மழையை அனுபவித்துக் கொண்டிருந்தது. விடாது பொழியும் மழையின் காரணத்தால் கேரள அரசு வரலாற்றில் முதல் முறையாக மாநிலத்திலுள்ள 42 அணைகளிலிருந்து 35 அணைகளை திறந்துவிட்டது. மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கும் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தாலும், கடுமையான நிலச்சரிவினாலும் அழிந்தன. சுமார் 80% மாநிலத்தில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. மாநிலத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. கொச்சின் சர்வதேச விமானநிலையத்தின் தடம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதனால் மூடப்பட்டது.

சத்குரு தனது ட்விட்டர் பதிவில்..

sgtweetononam-keralaflood-tamilblog-subimg

கேரள நிவாரணப் பணிகளில் ஈஷா செய்தது என்ன?

கேரளாவில் கடுமையான பாதிப்புக்குள்ளான பல்வேறு பகுதிகளுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நேரடியாகச்சென்று, களத்தில் இறங்கி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த மீட்புப் பணிகளில் பல்வேறு நிலைகளில் உதவிக்கரங்களை நீட்டினர்.

வரலாறு காணாத இந்த மழை வெள்ள பாதிப்பால் ஆங்காங்கே சிக்கித் தவித்த மக்களை காப்பாற்றி முகாம்களுக்கு அனுப்பிய மீட்புக்குழு, அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலத்திற்கான முதலுதவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பது போன்ற பணிகளையும் தொடர்ந்து செய்தது.

இதில் பெரும் சவாலான பணியான, பாதிப்புக்குள்ளான வீடுகளையும் இடங்களையும் தூய்மைசெய்து மறுசீரமைப்பு செய்யும் செயல்முறையில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக, சேதமடைந்த பள்ளிகளை சுத்தம்செய்து மறுசீரமைப்பு செய்யும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுவதால், விரைவாக குழந்தைகளின் கல்வி செயல்பாடுகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரத் தடை இத்தகைய பணிகளுக்கு பெரும்தடையாக இருக்கும் போதிலும், தன்னார்வத் தொண்டர்களின் விடாமுயற்சியும் ஈடுபாடும் அங்குள்ள மக்களுக்கு பெரும் பக்கபலமாய் உள்ளது.

“இந்த மாநிலத்தில் இப்போது அங்கமாக இருப்பதே ஒரு தனி அனுபவமாகத்தான் இருக்கிறது. பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இடத்தில், முகம் தெரியாத முற்றிலும் புதியவர்களின் வீட்டில் நுழைந்து, குடிநீருக்கோ, விளக்குமாறுகளுக்கோ அல்லது துடைக்கும் துணிகளுக்கோ கூட மக்கள் அங்குமிங்கும் அலைவதைத் தாங்க இயலவில்லை. 6 செ.மீ அளவிற்கு தேங்கிக் கிடந்த சகதியை அகற்றுகையில் அதனுள் ஒளிந்திருக்கும் பாம்புகள், ஊரும் பிராணிகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், எங்களின் இந்த சிறு உதவியால் அங்கிருந்த மக்கள் அடைந்த ஊக்கத்தையும், புத்துணர்ச்சியையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது," என்கிறார் நதி வீரராகிய தக்ஷினி தத். இவர் கேரள வெள்ள நிவாரணத்தில் நேரடியாக களப்பணியில் ஈடுபட்டவர்.

kerala-peridar-meetpu-pani-nadiveeras-cleaning

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேரள மாநிலம், நூறு வருடங்களில் காணாத, மாபெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் 175 ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் களத்தில் இறங்கி, அடிப்படை தேவைகள், மருத்துவ உதவிகள், வீடு, வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வது போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் 50 நதி வீர்ர்களும், சில மருத்துவர்களும் உள்ளனர். இதுவரை சுமார் 68,000 மக்களை தம் உதவும் கரங்களால் அணைத்துக் கொண்டுள்ளனர்.

கேரளாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உங்கள் அனுபவத்திற்கு கொண்டுவர இதோ ஒரு புகைப்படத் தொகுப்பு:

வெள்ள சேதத்தின் மதிப்பு:

kerala-peridar-meetpu-pani-scale-of-damage

950க்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். 80,000 பேருக்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவம், கடற்படை போன்ற நாட்டின் பல்வேறு மீட்பு படைகளாலும் மற்றும் உள்ளூர் மீனவர்களாலும் காப்பாற்றப்பட்டார்கள். 4000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மாநிலத்தின் சேத மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய் வரை கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 600 கோடி நிவாரண நிதியாக கொடுத்துள்ளது. கூடவே, 16 மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு ஒன்றிலிருந்து 25 கோடிகள் வரை நிவாரண நிதியாக அளித்துள்ளன. ஆனால், இதெல்லாம் போதாது. கேரளாவிற்கு தனி மனிதர்களிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிலிருந்தும் உதவிகள் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட கேரளாவில் ஈஷாவின் களப்பணிகள்:

கக்கூன் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான ப்ரியா சிங், “வார்டு எண் 12ல் இருக்கும் கோட்டயல் கோவிலக்கம் என்ற இடத்தில், சுமார் 300 குடும்பங்களுக்கான போதிய அளவு நிவாரண பொருட்கள் இல்லாமல்போன தருணத்தில்தான் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வந்து எங்களுடன் இணைந்தனர். துப்புரவு செய்யும் பொருட்கள் மட்டுமல்லாமல், அவ்வப்போது எங்களுடன் தொடர்புகொண்டு எங்களது நிலை பற்றிக் கேட்டறிந்தனர். தேவையான பொருள்கள் பன்மடங்காக கிடைத்தவுடன் இந்த 300 குடும்பங்களும் இரட்டிப்பு ஊக்கத்துடன் தங்களின் இருப்பிடங்களை துப்புரவு செய்யும் வேலையில் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உண்மையான நாயகர்களாகிய ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு எங்கள் நன்றிகள்,” என்கிறார்

kerala-peridar-meetpu-pani-nadiveerascleaning-img1

நான்கு நாட்களில் ஈஷாவின் முயற்சிகளால் 68,000 மக்கள் பயனடைந்தனர். இதுகுறித்த விரிவான தகவல்கள் இங்கே:

மீட்புப் பணிகள்:

நிற்கதியாய் செயலிழந்து தவித்த 120 பேர்களின் தேவைகளை உடனுக்குடன் உரிய நிவாரணக் குழுக்களுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் அவர்களுக்கு உதவினார்கள்.

துப்புரவு சேவை:

kerala-meetpu-21-nadiveeras-IYC-before-start-to-kerala

வெள்ளம் வடிந்தவுடன் வீடுகளை சுத்தப்படுத்த 21 நபர்கள் கொண்ட இளம் நதி வீரர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை அவர்கள் சுமார் 100 வீடுகளில் மட்டுமல்லாது, காலடியில் உள்ள ஆதிசங்கரர் ஆலயம் மற்றும் தேசோமிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலை சுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கோவில்களை துப்புரவு செய்வதில் 30 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

தனியாக வசிக்கும் வயதான பெண்மணிகள், துணை இல்லாத நிலையிலுள்ள வயதான தம்பதிகளின் வீடுகளை பிரத்யேக கவனம்கொண்டு, அவற்றை முதலில் தூய்மைசெய்வதற்காக தன்னார்வத்தொண்டர்கள் முனைந்தனர்.

kerala-peridar-meetpu-before-after

”நீங்கள் எங்கள் குழந்தைகளைப்போல வந்து உதவியதை நாங்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டோம்,” என்று வயதானவர்கள் இந்த இளைஞர்களை வாழ்த்தினார்கள்.

kerala-peridar-meetpu-pani-sgtweet-27082018

அடிப்படை வசதிகள்:

  • திருப்பூர், கோயம்பத்தூர், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பாலக்காடு போன்ற இடங்களிலிருந்து ஈஷா தன்னார்வத் தொண்டர் குழுவினர் 5 லாரிகள் முழுவதும் உணவுப் பொருள்கள், துப்புரவு செய்யும் சாமான், துணிமணிகள், ரப்பர் பூட்ஸ், பாதுகாப்பு முகமூடிகள் மற்றும் மருந்துப்பொருட்கள் என சேகரித்தனர்.
  • மக்கள் வீடு திரும்பும்போது உதவியாக இருக்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து, அடிப்படை தேவையான வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான பொருள்களைத் திரட்டி வழங்கினர்.
  • 250 முகாம்களுக்கு நாம் கீழ்கண்டப் பொருட்களை கொடுத்து உதவினோம்:
    1. 24,000 நபர்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வகைகள்
    2. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40000 நபர்களுக்கான துணிமணிகள்
    3. 12000 மக்களுக்கான 2,600 துப்புரவு பொருட்கள்
    4. ORS மற்றும் இருமல் சிரப் போன்ற சில பொதுவான மருந்துகள், சுமார் 8000 நபர்களுக்கு.
  • ஒருசில தன்னார்வத் தொண்டர்கள் மிக ஆர்வத்துடன் முன்வந்து, 6-8 முகாம்களுக்கான உணவு தயார்செய்து, தாங்களே வாகனத்தில் கொண்டுசென்று கொடுத்தனர்.
  • நீலாம்பூர் போன்ற வெகுதூர இடங்களிலிருந்தும் மக்கள் நிவாரண பொருட்களை வாங்க வந்திருந்தார்கள். ஆலுவா, பரூர், செங்கணூர், பத்தனம்திட்டா, வைக்கம், துரவூர் மற்றும் சேர்தலா போன்ற இடங்களிலிருந்து முகாம்களுக்கு நமது உதவியை கொடுத்துக் கொண்டிருந்தோம்.

kerala-peridar-meetpu-pani-cleaningmaterials-distributionவெள்ளம் குறையக் குறைய, மக்கள் தங்களது வீட்டிற்கு திரும்ப ஆரம்பித்ததும் கடைகளில் சுத்தம்செய்யும் பொருள்கள் பற்றாக்குறையாகிப் போனது. நாம் துப்புரவு பொருள்களைக் கொடுத்து உதவியதால் முகாம்களிலிருந்த மக்களும் தன்னார்வத் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.

மருத்துவ உதவி:

kerala-peridar-meetpu-pani-medical-vans

  • 3 ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஆகஸ்ட் 21 முதல் பாதிக்கப்பட்ட இடங்களில் இயங்கிக் கொண்டிருந்தன.
  • சராசரியாக ஒரு நாளில் சுமார் 740 நபர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
  • காய்ச்சல், சுவாசக் குழாய் தொற்று, வயிற்றுக் கோளாறு, சேற்றுப்புண், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், தோல் நோய்கள், சிறு காயங்கள் போன்ற பொதுவான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
  • பெரும்பாவூர், ஆலுவா, பரவூர் மற்றும் மலிங்கரா போன்ற இடங்களில் இந்த நடமாடும் மருத்துவமனைகள் இயங்கின.
  • தன்னார்வத் தொண்டர்கள், ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் கசாயம் கலப்பதில் செலவழித்தார்கள். (இயற்கை மூலிகையிலான நோய் எதிர்ப்பு கலவை). இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 120 லிட்டர் நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது.
  • முகாம்களில் ஆயுர்வேத மருத்துவம் என்பது அரிதானது என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெகுவாக நமது வித்தியாசமான மருத்துவ சேவையை பாராட்டினார்கள்.
  • வெளி மாநிலங்களிலிருந்தும் டாக்டர்கள் வந்து சேவை செய்ததைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

kerala-peridar-meetpu-pani-medicaidகேரள மக்களுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் பங்களித்திடும் வகையில் சத்குரு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். இத்தகைய ஒரு வாய்ப்பை நமக்கு கொடுத்து, நம்மாலான பங்களிப்பை அளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த சத்குருவிற்கு நமது நன்றிகள்.

kerala-peridar-meetpu-pani-medicaid-sgtweet-relief

kerala-peridar-sgtweet-maa-nun-hugging

kerala-peridar-meetpu-pani-sgtweet-skipmondaymeal

ஆசிரியர் குறிப்பு: தொடரும் இந்த கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் தங்களது பங்களிப்பும் இருந்திட விரும்பினால், இங்கே நன்கொடை செய்யலாம்:

இந்தியர்கள்: http://isha.co/KeralaRelief-India 

வெளிநாட்டினர்: http://isha.co/KeralaRelief-Overseas