நலம் விசாரிப்பதிலும், நடந்ததை விசாரிப்பதிலும் அலாதியான சுகம் உண்டு. அதிலும் ஈஷாவில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை அறிவதில் ஈஷா அன்பர்களுக்குள்ள ஆவலுக்கு குறைவிருப்பதில்லை. அந்த வகையில், கடந்த வார ஈஷா நிகழ்வுகள் உங்கள் ஆவலுக்கு விருந்தாய் உள்ளது. தொடர்ந்து படியுங்கள்!

இசை மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழாவில் ஈஷா சம்ஸ்கிருதி!

கர்நாடக இசையில் மும்மூர்த்திகளாகப் போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், ஷ்யாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் பிறந்த திருவாரூரில் மும்மூர்த்தி ஜெயந்தி விழா வெகு விமரிசையாக மே 6ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் கலந்துகொண்டு, சங்கீத கீர்த்தனைகளைப் பாடினர்.

கமலாம்பாள் சந்நிதி முன், தேவியின் 9 கிருத்திகளையும் பாடிய மாணவர்கள், மும்மூத்திகள் ஜெயந்தி விழாவில், மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாடியதோடு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

2
3

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
தர்மபுரி ஈஷா வித்யாவில் விளையாட்டு தினம்!

தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியில் முதல் விளையாட்டு தினம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. "நீர்-நெருப்பு-ஆகாயம்-பூமி" என்கிற பெயர்களில் மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து போட்டிகளில் கலந்துகொண்டனர். LKG மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ஓட்டப்பந்தயம், கோ-கோ போன்ற தடகளப் போட்டிகளோடு சதுரங்கம் போன்ற உள்-அரங்க விளையாட்டுகளும் நிகழ்ந்தன. 14வது லோக்சபா உறுப்பினர் திரு R.செந்தில் அவர்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். "ஆகாயம்" குழுவினர் சேம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழுப்புரம் ஈஷா வித்யாவில் உணவுத் திருவிழா

6ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 'ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடத்தை செயல்முறை விளக்கமாக மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் உணவுத் திருவிழா விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் பலதரப்பட்ட உணவுகள் வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டதோடு, அரோக்கியமான உணவையும் ஆரோக்கியமற்ற உணவையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி விளக்கப்பட்டது.

"ஜங்க் ஃபுட்" என்றழைக்கப்படும் உணவு வகைகளின் கெடுதல் பற்றியும் இயற்கை உணவுகளின் அருமைகளைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக மாணவர்களுக்கு புரிதல் உருவாக்கப்பட்டது.


24
25

36 கிராமங்களைச் சுற்றிய ஈஷா மருத்துவ வாகனம்

இந்த வாரம் ஈஷாவின் 6 நடமாடும் மருத்துவமனைகள் கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, மருத்துவ சேவை புரிந்துள்ளன. இதில், கிராமங்களிலுள்ள 601 ஆண்களும் 1251 பெண்களும் பயன்பெற்றுள்ளனர்.

பசுமையைக் கொண்டாடிய ஒரு கூட்டம்!

L&T கட்டுமானங்கள் மற்றும் ஈஷா பசுமைக் கரங்களின் பசுமை ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து ஒரு பசுமைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். L&T நிறுவனத்தின் 77வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக அமைந்த இந்த நிகழ்வில், ஈஷா பசுமைக் கரங்களுடன் L&T நிறுவனம் இணைந்து செயல்பட்டுவருவதை பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் திரு. V.S. ரமணா (GM – CSR & CSTI).

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் மரக்கன்றுகளை நடுவதற்காக, ப்ளாஸ்டிக் பைகளில் மண்ணை நிறைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் அவர்களால் நடப்பட்டன. அதோடு, நிகழ்ச்சியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் விநாடி-வினா போட்டியிலும் கலந்துகொண்டு குதூகலித்தனர்.