புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 6

ஈஷா வித்யாவின் இத்தகையதொரு மாபெரும் வளர்ச்சிக்கு மூலமாகவும் ஈஷா வித்யாவின் தூண்களாகவும் விளங்கும் ஆசிரியர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள் என்பதை புரியவைப்பதாய் அமைகிறது இந்த பதிவு!

பகுதி 1 2 3 4 5 7 8 9 10

கல்வியின் நோக்கம் தகவல்களை வலுக்கட்டாயமாக திணிப்பதாக இருக்க கூடாது, மாறாக அறிவுத் தாகத்தை தூண்டுவதாய் இருக்க வேண்டும். -சத்குரு

1. ஈடுபாடுமிக்க ஈஷா வித்யா ஆசிரியர்கள்

மாணவர்களிடம் கேட்டோம், (சில மேல்நிலை வகுப்பு மாணவர்களிடமும்) “ஈஷா வித்யாவில் நீங்கள் அதிகம் விரும்புவது எதை?” “ஆசிரியர்கள்” என்ற பதிலைத்தான் பெரும்பாலான மாணவர்கள் உற்சாகத்துடன் உச்சரித்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் சொன்னார்கள், “ஆசிரியர்களை நாங்கள் விரும்புவது ஏனென்றால், அவர்கள் எங்களிடம் மென்மையாக நடந்துகொள்வதோடு, மற்ற பள்ளிகளில் உள்ளதுபோல் எங்களுக்கு அவர்கள் தண்டனை ஏதும் வழங்குவதில்லை!”

70% ஆசிரியர்கள் இங்கு அதிகப்படியான சம்பளம் பெறப்படாதபோதிலும் பள்ளியை விட்டு போகாமல் பணியாற்றுகின்றனர்.

6-1-sridevi

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைப்பதாய் இருந்தாலும், வேறு பள்ளிக்கு செல்வதை என்னால் கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை.” பள்ளி துவங்கிய காலம்முதல் ஆங்கில ஆசிரியராக உள்ள ஸ்ரீதேவி அக்கா இப்படி சொல்கிறார்.

6-2-principal

பள்ளி முதல்வர் S. திலகவதி, M.Sc., மைக்ரோபயாலஜி, ஈரோடு ஆசிரியர்கள் சமூகத்தில் நன்கறிந்தவர். பிற பள்ளிகளிடமிருந்து இவருக்கு நல்ல சம்பளத்திற்கு பணிபுரிய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. சில வருடங்கள் முன்பு, தனது ஆசிரியர் கேட்டுக்கொண்டதனால் அவருக்கு நன்றி வெளிப்படுத்தும் விதத்தில் முன்பிருந்த பள்ளிக்கு சென்று 6 மாதங்கள் பணிபுரிந்தார். ஆனால், ஈஷா வித்யாவை விட்டு போக இயலாதவராய் மீண்டும் அவர் ஈஷா வித்யாவிற்கே வந்துவிட்டார். ஓய்வின்றி ஈஷா வித்யாவிற்காக பணியாற்றும் இவர், பள்ளியின் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாய் இருக்கும் ஆசிரியர்களுள் ஒருவர். இவரது இரண்டு குழந்தைகளும் இதே பள்ளியில்தான் பயில்கிறார்கள்.

“பள்ளியில் நுழைந்தவுடன் என்னுடைய பிள்ளைகள் இருப்பதை நான் கவனிப்பதே இல்லை. நான் வேலைநிமித்தமாக வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், குழந்தைகள் வீட்டிற்கு சென்று தங்கள் பணிகளைச் செய்யத் துவகிவிடுவார்கள்.” -S. திலகவதி, பள்ளி முதல்வர் -ஈரோடு ஈஷா வித்யா.

6-3-kokila-nandhini

“நாங்கள் ஈஷா வித்யாவிற்கு தினமும் வந்துசெல்லும் தொலைவில் மாப்பிள்ளை வீட்டார் இருக்கும்படியாக பெற்றோர்களிடம் எங்களுக்கு வரண் பார்க்க சொல்லியிருக்கிறோம்.” இரண்டு இளம் ஆசிரியைகள் (அவர்களும் மாணவிகளைப் போலவே உள்ளனர்) -துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் நந்தினி & கோகிலா.

2. ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதில்லை வழிகாட்டுகிறார்கள்!

collage-1-1

“எங்கள் ஆசிரியர்கள் தாங்களே குப்பைகளை எடுத்துப் போடுவதையும், செருப்புகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் அவற்றை முறைப்படுத்துவதையும் நாங்கள் பார்த்தோம். வகுப்புகளில் சிலவற்றை எங்களிடம் செய்யச்சொல்லி சொல்லாமல், அவர்களாகவே செய்வதை கவனித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இவற்றை செய்யத் துவங்கினோம். இப்போது என்னுடைய பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலோ அல்லது தெருவிலோ ஏதேனும் குப்பைகள் கிடந்தால் உடனே நானாகவே அவற்றை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுகிறேன். -கோகுலன்.EA, 11ஆம் வகுப்பு மாணவன்

“ஏதேனும் ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டுவிட்டால், உடனே வினிதா மேடம் அல்லது ஜெகதீஷ் அண்ணா போன்ற ஆசிரியர்கள் முதலுதவி பெட்டியுடன் ஓடிவந்து அந்த குழந்தைக்கு அன்புடன் சிகிச்சை செய்வார்கள். அவர்களின் அன்பும் அக்கறையும் என்னை வெகுவாக தொட்டுள்ளது.” -ப்ரியதர்ஷினி.P, 11ஆம் வகுப்பு மாணவி.

“நான் கால் வலிக்கிறதென்று சொன்னதும் ஆசிரியர் என்னுடைய காலை அவருடைய கைகளால் பிடித்து மெதுவாக அழுத்திக்கொடுப்பார். மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் கால்களைத் தொடமாட்டார்கள்” -தமிழ்ச்செல்வன்.S, 7ஆம் வகுப்பு மாணவன்.

“கடந்த ஆண்டு, ஆறுமாத காலத்திற்கு பள்ளியில் ‘படிக்கும் நேரம்’ நீட்டிக்கப்பட்டிருந்த சமயத்தில் எனக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமான்து. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் அழத்துவங்கினேன். ஜெகதீஷ் அண்ணா மற்றும் இரண்டு உதவியாளர்கள் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு, நான் தூங்கும்வரை இரவு சுமார் 1 மணி வரைக்கும் என்னுடனேயே இருந்தனர். என்னை விட்டு அவர்கள் போகாமல் இருக்கவேண்டுமென நான் நினைத்ததால் அவர்கள் அன்று இரவு உணவு கூட உட்கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். நான் குணமான உடனே எனது ஆசிரியர் அங்கே வந்து கூட்டிச்சென்றார். அவர்களது அன்பும் அக்கறையும் என்னை திக்குமுக்காடச் செய்கிறது, நான் அதனை ஒவ்வொரு தருணத்திலும் நினைத்துக்கொள்கிறேன்.” -ப்ரிய தர்ஷினி, 11ஆம் வகுப்பு.

“கடந்த ஆண்டு, ஆறுமாத காலத்திற்கு பள்ளியில் தங்கி படித்த சமயத்தில் ஒரு மாணவனுக்கு போட்டுக்கொள்வதற்கு சுத்தமான ஆடைகள் இல்லை. அவன் வைத்திருந்த இரண்டு சட்டைகளில் ஒன்று துவைத்து ஈரமாக காய்ந்துகொண்டிருந்தது, மற்றொன்றும் எதிர்பாராத விதமாக ஈரமாகிப்போனது. அருகிலுள்ள தனது வீட்டிற்குச் சென்ற ஜோதிலிங்கம் சார் புதிய சட்டை ஒன்றை அந்த குழந்தைக்கு கொண்டுவந்து கொடுத்தார். அந்த குழந்தை தன்னுடைய பெற்றோரிடமிருந்து இதற்கான தொகையை பெற்றுத் தருவதாக சொன்னபோது அவர் அன்பாக கோபித்துக்கொண்டார்.” -சரவணன், 11ஆம் வகுப்பு.

3. ஆசிரியர்களும் மாணவர்களாக...

6-10-jothilingam

“இங்கிருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் நானும் இந்த பள்ளியில் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். எந்தவொரு பாடத்திலும், தலைப்பிலும் அல்லது செயல்பாட்டிலும் மாணவர்களுக்கு கேள்விகேட்கும் சுதந்திரம் உள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் வளர்ச்சிபெறும் வாய்ப்பை வழங்குகிறது. நான் மாணவனாக இருந்தபோது எங்களுக்கு கேள்விகேட்கும் சுதந்திரம் இல்லை. தண்டனை கிடைக்குமே என்ற அச்ச உணர்வு எங்கள் தலைக்குள் எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். இங்குள்ள இந்த வழிமுறை மாணவர்கள் முன் நான் நிற்கும்போது எப்போதும் சிறந்த ஆசிரியராக என்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கு என்னை உந்துகிறது. இன்னும் தெரிந்துகொள்வதற்கும் சிறப்பாக நடந்துகொள்வதற்கும் என்னை உற்சாகப்படுத்துகிறது. சில சமயங்களில் எனக்கு இப்படித் தோன்றும் “அங்கு 900 ஆசிரியர்கள் இருப்பதாக!

என் மாணவர்களில் ஒருவரான ‘பூமிகா’ கடந்த ஆண்டு எனக்கு கடினமான சூழநிலைகளில் எப்படி ஆனந்தமாக இருப்பதென்று கற்றுத்தந்தாள்.” அவள் சோர்வாக இருந்து நான் பார்த்ததே இல்லை. நான் எப்போதாவது அமைதியின்றி கோபம் அல்லது பதற்றமடையும்போது அவள் என்னை சரிசெய்வாள்” - ஜோதிலிங்கம், சமூக அறிவியல் ஆசிரியர்.

4. ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளுக்கான நேரம்

பள்ளியின் நெறிமுறைப்படி, ஒவ்வொரு வகுப்பு நேரத்தின் முடிவிலும் கடைசி 10 நிமிடங்கள் மாணவர்கள் கேள்வி கேட்பதற்காக வழங்கப்படும். அவர்கள் அந்த வகுப்பை பற்றி அல்லது அது தொடர்பானவை பற்றி (வகுப்புநேரத்தில் அவர்களுக்கு எழுந்த கேள்விகளும் சேர்த்து) கேள்விகேட்பார்கள்.

மேலும், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் ஏதேனும் ஒரு தலைப்பில் வகுப்பு ஆசிரியருடன் குழந்தைகள் “Home-Room” (ஈரோடு ஈஷா வித்யா பள்ளியில் பிரத்யேகமான ஒரு செயல்முறை) எனப்படும் கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள்.

5. குழந்தைகள் கேள்விகேட்கும் விதம்

“இடைவிடாமல் கேள்விகளைத் தொடுக்கும் மாணவன் ஜனார்தன், என்னை எந்நேரமும் விழிப்புடன் வைத்திருக்கச் செய்வதோடு, ஒரு சிறந்த ஆசிரியராக இருக்கவும் காரணமாகிறான்” -ஸ்ரீதேவி அக்கா

“நீங்கள் சொல்லித் தருவதை நாங்கள் கூகுள் மூலமாகவே கற்றுக்கொள்ளமுடியும், நீங்கள் எங்களுக்கு தரும் பிரத்யேக வழிமுறை என்ன?” இப்படி ஒரு மாணவன் கேட்கிறான். அவன் ‘டைம் மெஷின்’ எனும் இயந்திரத்தை உருவாக்கும் தன் விருப்பத்தைக் கூறுகிறான். இதுபோன்று நமது கல்விமுறையை தைரியமாக கேள்விகேட்கும் குழந்தைகளைப் பெற்றுள்ளதில் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். -ஜோதிலிங்கம்

6. தண்டனை கிடையாது; திருத்தம் உண்டு!

ஒரு குழந்தையின் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்கள் கடினமான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக, குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் புதுமையான விதத்தில் அவர்களுக்கு ஒழுக்கநெறிகள் புரியவைக்கப்படுகின்றன.”

6-11-abinidi-2

“நான் 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக மிகவும் மோசமாக திட்டியதோடு, அடிக்கவும் செய்தார்கள். ஆனால், இங்கே ஒரு குழந்தை குறைவான மதிப்பெண் பெற்றால், அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதற்கு பதிலாக ஆசிரியர்கள் கூடுதல் அக்கறைகொள்கிறார்கள்.” அபிநிதி

#10YrsOfIshaVidhya