ஆட்டிசம், செரிபிரல் பால்ஸி, நரம்புத் தளர்ச்சி, மூளை நோய்கள்... எல்லாவற்றுக்கும் தீர்வு...

thaimai-sketchஒரு குழந்தையின் ஆரோக்கியம், ஒரு தாயின் கருவறையிலேயே துவங்குகிறது.

ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னை நன்றாகப் பேண வேண்டும் என்ற மூதாதையரின் வலியுறுத்தல் இதற்காகவே! நோயின்றிப் பிறந்த குழந்தை, நோயின்றி வளர பல வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

ஈஷா லைஃப் கிளினிக்கில், குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் மூளை சம்பந்தமான நோய்கள் தவிர்க்கவும், சரிசெய்யவும் படுகிறது. சித்த மருத்துவம், யோக முறைகள், ஆயுர்வேத தெரபிகள், கிளேஷ நாசன கிரியா, அலோபதி போன்றவற்றை ஒருங்கிணைக்கும்போது குழந்தைகள் ஆரோக்கியத்தில் பல மேம்பட்ட நிலைகளை அடைகிறார்கள். முக்கியமாக, ஆட்டிசம், கவனக்குறைபாடு (Attention Deficit Hyperactive Disorder) போன்றவற்றுள் நல்ல முன்னேற்றங்களைக் காண்கிறோம். சில குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் பெற்றோரின் பகிர்வுகளும் உங்களுக்காக. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

சஞ்ஜய்:

ஈஷா குழந்தைகள் நல கிளினிக்கிற்கு சஞ்ஜய் வரும்போது அவனுக்கு மூன்று வயது. ஆட்டிசம் குறைபாடு எனச் சொல்லப்பட்டிருந்தது. குழந்தையிடம் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் காணப்பட்டன. சகஜமாக ஒருவரிடமும் பழக முடியாமல், ஓரிடத்தில் அமர முடியாமல் கூச்சலிட்டபடி இருப்பான். மலக்கட்டு மோசமாக இருந்தது. தாயின் முகத்தைப் பார்ப்பதோ, பழகுவதோ கிடையாது. அப்பாவை மட்டும் அறிந்து கொள்வான். இதனால் தாய் பெரும் வேதனையுற்றாள். பெற்றோர் சோகத்தின் உச்சத்தில் இருந்தனர்.

குழந்தைக்கு அதிக மாந்தம் இருந்தது. மாந்தத்தினால் பல்வேறு நோய்கள் வருவதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. மாந்தம் களையவும், வளர்ச்சிக்கும் உரிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. நாளடைவில் மலம் வெளியேறுதல் சீரானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

க்ளேஷ நாசன கிரியா 21 முறை செய்யப்பட்டது. விரைவிலேயே நல்ல மாற்றங்கள் தெரிந்தது.

இரண்டரை ஆண்டுகள் இடையிடையே க்ளேஷ நாசன கிரியா பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டது. இப்போது சஞ்ஜய்யின் அறிவு சற்று முதிர்ச்சி அடைந்துள்ளது. ஓரிடத்தில் அமர முடிகிறது. சிறப்புப் பள்ளிக்குச் செல்கிறார். இவரிடம் அதீத இசைத் திறன் இருப்பதாகவும், பாடல்களை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்வதாகவும் சொன்னார்கள். மழலைப் பாடல்களை ஆர்வமுடன் பாடுவதாக அம்மா புன்னகையுடன் நம்முடன் பகிர்ந்து கொண்டார். கண் பார்த்துப் பழகுவதால், இப்போது நண்பர்கள் இவருக்கு அதிகமாம்! அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

ஹரிதா:

9 மாதக் குழந்தையான ஹரிதாவிற்கு 1 மாதத்திற்கு மட்டுமே உரிய வளர்ச்சி இருந்தது. நரம்பு மண்டலத்தில் வளர்ச்சிக் குறைபாடு, வலிப்பு, பெருமூளை வாதம் (cerebral palsy) என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

வலிப்பு வருவதால் அதற்கான ஆங்கில மருந்துகள் நிறைய தரப்பட்டிருந்தன. ஈஷா குழந்தைகள் கிளினிக்கிற்கு பெரும் நம்பிக்கையுடன் பெற்றோர் வந்திருந்தனர். ஹரிதா அமைதியாகவும், அதிக மருந்துகளால் தூங்கியவாறும் இருந்தாள். உடலால் நன்கு வளர்ந்திருந்தாலும் இடது கை மற்றும் காலில் பலம் குறைந்து காணப்பட்டது. நரம்பியல் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தேவையான அலோபதி வலிப்பு மருந்துகளைத் தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன.

சித்த மருந்துகள் மூலம் மாந்தம் நீக்கப்பட்டு மலச்சிக்கல் சரிசெய்யப்பட்டது. ஹரிதாவுக்கு க்ளேஷ நாசன கிரியா பரிந்துரைக்கப்பட்டது. ஒரு மாதத்திலேயே தலை நின்றது. குழந்தையால் கழுத்தைத் திருப்பிப் பார்க்க முடிந்தது. மழலைச் சத்தமே கேட்டிராத அந்தப் பெற்றோர், அவள் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தனர்.

அடிக்கடி பிடித்த சளித்தொல்லை நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இப்போது ஹரிதாவுக்கு 2 வயதுக்கான வளர்ச்சி வந்துவிட்டது. கை, கால்களின் பலம் அதிகரித்துள்ளது. தூங்கிய நிலையிலேயே இருந்த ஹரிதா, இப்போது குறும்புக் குழந்தையாக வளைய வருகிறாள். ஆசையுடன் அவளைப் பெற்றோர் ரசித்தபடி உள்ளனர். இடது கை மற்றும் கால் கிட்டத்தட்ட முழுமையான பலம் பெற்றுவிட்டன.

ரித்விக்:

நான்கு வயதான ரித்விக் ஒரு வயது வரை இயல்பாகத்தான் இருந்தான். இரண்டாம் ஆண்டிலிருந்து மனவளர்ச்சி குறைந்து, ஓரிடத்தில் அமராமல், விளையாடுவதில் நாட்டமில்லாமல், கவனக்குறைவுடன் காணப்பட்டதாக பெற்றோர் கூறினர். அறவே நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஜுரம், சளி அடிக்கடி பிடிப்பதாகத் தெரிந்தது. இத்துடன் கடுமையான மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளுடன் ஈஷா குழந்தைகள் கிளினிக்கிற்கு வந்திருந்தான். பெற்றோர் சமாளிக்க முடியாமல் திணறினர்.

சித்த மருந்துகளால் மலச்சிக்கல் குறைந்து சிறுநீர், மலம் ஆகியவை பற்றிய உணர்வு இல்லாத குழந்தைக்கு இப்போது தானாக கழிவறை சென்று கழிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

க்ளேஷ நாசன கிரியா அளிக்கப்பட்டது. சித்த மருந்துகள் மற்றும் க்ளேஷ நாசன கிரியாவால் குழந்தை பேசவும், பழகவும் ஆரம்பித்தது. படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. கவனம் மற்றும் ஞாபகசக்தி அதிகரித்து வருவதாக பெற்றோர் சந்தோஷத்துடன் தெரிவித்தனர்.

ishalife-logi

ஈஷா லைஃப் ஹெல்த் சொல்யூஷன்ஸ்,
2, கிளப் ஹவுஸ் ரோடு, (ஸ்பென்சர் ப்ளாசா அருகில்) மவுண்ட் ரோடு, சென்னை.
044-8885333/ 83000 45333
programs@ishalife.org
www.ishalife.org