Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
நம் அனைவருக்கும் ஆனந்தமாகவும் உள்நிலையில் நலமாகவும் வாழும் ஆற்றல் உண்டு - நமக்குள் சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கினால் போதும்.
நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள் என்ற இடைவிடாத விழிப்புணர்வுடன் இருந்தால்தான், நீங்கள் உண்மையாகவே விழிப்புணர்வாக மாறுவதுடன், வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கமுடியும்.
நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை சூழ்நிலைகள் நிர்ணயிக்காமல், சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயித்தால் - அதுதான் வெற்றி.
நீங்கள் தேர்வுசெய்தால், இந்தக் கணப்பொழுதில் நீங்கள் ஆனந்தமாக இருக்கமுடியும். நீங்கள் ஆனந்தத்தைத் தேர்வுசெய்தால் போதும்.
பொருள் உலகில் நிகழும் ஒவ்வொன்றுமே, அடிப்படையில் ஒருவிதமான அலைதான். நீங்கள் ஒரு நல்ல படகோட்டியாக இருந்தால், ஒவ்வொரு அலையும் ஒரு சாத்தியமே.
பூமித்தாயின் மடிதான் நமக்கு ஊட்டமளிக்கிறது. இயல்பாகவே, நாம் அவள் மீது மரியாதை கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் மனம் ஒரு நெருப்பு பந்தைப் போன்றது. உங்கள் மனதை உங்கள் வசப்படுத்தினால், அது சூரியனைப்போல ஆகமுடியும்.
பொறாமையின் அடிப்படையான தன்மையே ஒரு நிறைவில்லாத உணர்வுதான். நீங்கள் உண்மையாகவே ஆனந்தமாக இருந்தால் எவரைப் பார்த்தும் பொறாமைப்பட மாட்டீர்கள்.
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தை நன்றாக நடத்துங்கள், உங்கள் வருங்காலம் தானாகவே மலரும்.
என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றியதல்ல. அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது.
நீங்கள் என்ன செய்தாலும் இதை கவனியுங்கள் - அது முற்றிலும் உங்களைப் பற்றியதா, அல்லது அனைவர் நல்வாழ்வுக்குமானதா. இது நல்ல கர்மாவா கெட்ட கர்மாவா என்பது குறித்த எவ்வித குழப்பத்தையும் தீர்த்துவிடும்.