Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
யோகா - உடல், மனம், ஆன்மீகம் ஆகிய பரிமாணங்களில் அதிசயிக்கும்படி வேலை செய்யும். ஒரே விஷயம், நீங்கள் அதை செய்ய வேண்டும்.
வாழ்க்கையை நீங்கள் ஆழமாக புரிந்து உணர விரும்பினால், உங்களைப் பற்றி அடுத்தவர்கள் கொண்டுள்ள அபிப்ராயங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது.
உங்களுக்கு பிடித்தவை என இருப்பவற்றின் எல்லைக்குட்பட்டு இருப்பதை விட, உங்களின் இந்த கட்டுப்பாடுகளை தாண்டிப் போவது மிக மிக முக்கியம்.
எந்த வேலையும் மன அழுத்தம் தருவதல்ல. உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளை கையாள முடியாமல் இருப்பதுதான் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உங்கள் உடலிலும், மனதிலும், உணர்வுகளிலும் நீங்கள் விரும்பும் சூழலை உருவாக்க முடிந்தால், உங்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்வாழ்வு எல்லாம் கவனித்துக்கொள்ளப்படும்.
வாழ்வில் முன்னோக்கி நகர்கிறோமா என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நேற்று இருந்ததை விட இன்று கொஞ்சம் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேனா என்று பார்த்தாலே போதும்.
கஷ்டமான காலங்களை உங்களுக்குள் நயமாக கடக்க முடிந்தால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பு என்று உணர்வீர்கள்.
உங்களுக்கு என்ன நடந்தாலும் சரி, நீங்கள் அதை ஒரு சாபமாகப் பார்த்து பாதிப்படையலாம், அல்லது ஒரு வரமாகப் பார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.