Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், அதனால் ஆகச்சிறந்ததை செய்கிறது. மனிதன் மட்டும்தான் தயங்குகிறான்...
ஆன்மீக பரிமாணம் இல்லாத ஒன்று இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. இங்கிருக்கும் அனைத்துமே ஆன்மீகம்தான், ஆனால் உணரப்படாமல் இருக்கிறது.
ஒரே நேரத்தில் பரிபூரண தீவிரத்துடனும், முழு தளர்வுடனும் இருப்பதுதான் யோகத்தின் அடிப்படை.
ஆன்மீகத்தின் அடிப்படை, நம்முடைய யூகங்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்வது - 'எனக்கு எது தெரியுமோ, அது தெரியும். எனக்கு எது தெரியாதோ, அது தெரியாது.'
இங்கே நலமாக வாழவும், இந்த வாழ்வை கடந்த முக்திக்கும் - அனைத்திற்கும் வழி நமக்குள்ளேயே இருக்கிறது.
நீங்கள் செலவிடும் நேரத்தில் - பிழைப்பிற்கான விஷயங்களுக்கு எவ்வளவு, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு எவ்வளவு என்று கவனியுங்கள். நேரம் - அது பணம் அல்ல, அது உயிர் ஆகும்.
முற்றிலும் சரியானவராக இருக்க வேண்டியதில்லை. நாம் இப்போது இருப்பதை விட மேலானவராக மாறும் முயற்சியில் தொடர்ந்து இருப்பதுதான் முக்கியம்.
பக்கத்தில் இருப்பவரிடம் அன்பாக இருப்பதுதான் பெரிய சவால். இங்கு இல்லாத ஒருவரிடம் அன்பாக இருப்பது எப்போதும் சுலபம்.
உடலில் உணரும் வலியை பற்றி நாம் தீர்மானிக்க ஒன்றும் இல்லை. ஆனாலும், அதனால் துன்பப்படாமல் இருக்க முடியும் - அந்த வாய்ப்பு எப்போதும் நம் கையில் உள்ளது.
மனிதர்களுக்கு தங்களின் பைத்தியத்தை மறைத்துக்கொள்ளவே பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. முழு சமநிலையில் இருந்தால், சும்மா உட்கார்ந்தபடி ஒரு பூ மலர்வதை கூட அவர்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்.
எதையும் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். வாழ்வின் அர்த்தத்தை தேடிப்பார்க்க வேண்டாம். கடவுளை தேடிப்பார்க்க வேண்டாம். உள்ளதை உள்ளபடி பாருங்கள் - அவ்வளவுதான்.