Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
ஆன்மீகம் என்றால் நல்ல, சாந்தமான வாழ்க்கையை வாழ்வது என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஆன்மீகம் என்றால் தீ போல் தீவிரமாக இருப்பது.
கண்ணும் மூக்கும் எப்படி இருந்தாலும், ஓர் ஆனந்தமான முகம் என்றும் அழகான முகமே. ஆனந்தமாகவே மாறுங்கள், அழகாகிடுங்கள்.
உங்கள் அபிப்ராயங்கள் ஒரு தடுப்புச்சுவர் ஆகும் - மற்றவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான். மூடப்பட்ட மனம் என்றால் மூடப்பட்ட வாய்ப்புகள்.
மனிதர்கள் இரண்டு வகை: நிகழ்வுகளை நிகழச் செய்பவர்கள். நன்றாக நடந்தால் அதை அனுபவித்துவிட்டு, அப்படி நடக்காதபோது குறை சொல்பவர்கள்.
பல்லாயிரம் வருடங்களாக நம் நதிகள், நம்மைத் தாய் போல் அரவணைத்து உயிரூட்டி வளர்த்து வந்துள்ளன. நாம் நதிகளை அரவணைத்து உயிரூட்டி வளர்க்க வேண்டிய நேரம் இது.
முழுமையாக இருக்க நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை, எதுவும் யோசிக்கவோ உணரவோ தேவையில்லை. உள்ளபடியே, நீங்கள் பூரணமான உயிர்தான்.
மனிதரான நீங்கள், வாழ்க்கை உங்களை எங்கு கொண்டு செல்லுமோ என்று யோசிக்க வேண்டாம். நீங்கள் அதை எங்கே கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் என்று யோசிக்க வேண்டும்.
புத்திக்கூர்மை என்றால் மற்றவர்களைவிட சாமர்த்தியமாக இருப்பது அல்ல, வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்ப்பது.
மன அழுத்தம் வாழ்க்கையின் இயல்பான அம்சம் அல்ல. உங்கள் உடல்-மன அமைப்பை சரியான முறையில் கையாள முடியாமல் போகும்போது மன அழுத்தம் வருகிறது.
இறப்பது நம் இயல்பு என்பதை எதிர்கொண்டால் மட்டுமே, தாண்டிப் போகவேண்டும் என்ற ஏக்கம் தீவிரம் அடையும். இல்லாவிட்டால், ஆன்மீகம் வெறும் பொழுதுபோக்காகவே இருக்கும்.
விநாயகர், கணபதி என்பவர் புத்தியில் சிறந்தவர் மட்டுமல்ல - அவர் தடைகளை நீக்குபவர். முக்கியமாக, நீங்களே உங்கள் வாழ்வின் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முழுமையான திறனை அடைந்துவிட்ட நிலை என்று எதுவும் இல்லை. மனித உயிரான நீங்கள் ஓர் எல்லையற்ற சாத்தியம்.