Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உண்மையான பேரன்பு, கொடுத்து திரும்ப பெறுவதைப் பற்றியது அல்ல. என்ன தேவையோ அதை செய்வது.
இன்னொருவர் என்ன செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்குள் இல்லாதபோது, உங்கள் உறவுநிலை வெற்றிகரமாக இருக்கும்.
நான் நேசிக்கப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லாமல், அனைவரின் மீதும் நேசத்தை பொழிய முடிந்தால் - அதுதான் சுதந்திரம்.
ஆன்மீகம் என்றால் நல்ல, சாந்தமான வாழ்க்கையை வாழ்வது என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஆன்மீகம் என்றால் தீ போல் தீவிரமாக இருப்பது.
வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாததால்தான் சலிப்பு வருகிறது. உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் - அதற்குள்ளேயே நீங்கள் தொலைந்து போய்விடுகிறீர்கள்.
உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துக்கொள்கிறீர்கள், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், இதற்கு உயிர்நிலையில் எந்த ஒரு முக்கியத்துவமும் கிடையாது.
பல்லாயிரம் வருடங்களாக நம் நதிகள், நம்மைத் தாய் போல் அரவணைத்து உயிரூட்டி வளர்த்து வந்துள்ளன. நாம் நதிகளை அரவணைத்து உயிரூட்டி வளர்க்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் மற்ற எல்லோரையும் விட சிறந்தவராக இருக்க வேண்டியதில்லை. அதேசமயம், உங்களின் ஆகச்சிறந்த நிலையில் இருப்பது அவசியம்.
உங்கள் வாழ்க்கை சூழ்நிலையில் எவ்வளவு தீவிரமான பிரச்சனை இருந்தாலும், உங்களையே ஒரு பிரச்சனையாக ஆக்கிவிட வேண்டாம்.
கற்றுக்கொடுத்தல் ஒரு தொழிலாக இருக்கக்கூடாது - அது ஆழமான ஆர்வமாக இருக்கவேண்டும். அப்போதுதான் கல்வி என்பது தகவல்களை திணிப்பதாக இல்லாமல், உண்மைக்கான தேடலாக மாறும்.
மன அழுத்தம் வாழ்க்கையின் இயல்பான அம்சம் அல்ல. உங்கள் உடல்-மன அமைப்பை சரியான முறையில் கையாள முடியாமல் போகும்போது மன அழுத்தம் வருகிறது.