Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, வாழ்க்கை உங்களை எல்லாவிதமான சர்க்கஸ்களையும், வித்தைகளையும், கரணங்களையும் செய்ய வைக்கும். நீங்கள் தயாராக இருந்தால், அதை சந்தோஷமாக செய்யலாம்.
அமைதியும் சந்தோஷமும் பொதிந்திருப்பது, காட்டிலும் அல்ல, கடைத்தெருவிலும் அல்ல - உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
உங்கள் குழந்தை நன்கு வளர, நீங்கள் ஒன்றும் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. அன்பாக, ஆனந்தமாக, நேர்மையாக இருந்தால் போதும்.
உண்மையான பேரன்பு, கொடுத்து திரும்ப பெறுவதைப் பற்றியது அல்ல. என்ன தேவையோ அதை செய்வது.
நிலத்தில் நிலையாக நின்று, அதேசமயம், உயர எழும்பி ஆகாயத்தைத் தொடுவது - ஆன்மீகமுறையின் சாரம் இதுதான்.
சுலபமோ கடினமோ - நீங்கள் எங்கே சென்றடைய வேண்டும் என்பதிலிருந்து ஒருபோதும் உங்கள் கவனத்தை தவறவிடாதீர்கள்.
ஒருபோதும் யாரைப் பற்றியும், எந்த ஒரு அபிப்ராயமும் உருவாக்க வேண்டாம். இந்தக் கணத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அது ஒன்றுதான் முக்கியமானது.
கர்மா நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. உடம்புடன் உங்களை ஒட்ட வைக்கும் பசை - அதுதான் கர்மா. உங்கள் கர்மா மொத்தத்தையும் கரைத்துவிட்டால், அந்தக் கணமே உடலை விட்டுவிடுவீர்கள்.
கட்டுப்படுத்துவது என்றால் ஏதோ ஒன்றை, ஓர் எல்லைக்குள் பிடித்து வைப்பது. உங்கள் மனத்தை கட்டுப்படுத்த வேண்டாம் - அதை விடுபட செய்யுங்கள்.
நீங்கள் மற்ற எல்லோரையும் விட சிறந்தவராக இருக்க வேண்டியதில்லை. அதேசமயம், உங்களின் ஆகச்சிறந்த நிலையில் இருப்பது அவசியம்.