Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
யோகா, கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் மனத்தையும் பித்தான நெஞ்சத்தையும் சமநிலைப்படுத்துவது எப்படி என்பதையே எப்போதும் பார்க்கிறது.
நம் அனைவருக்கும் காலம் ஒரே வேகத்தில்தான் முடிந்துகொண்டு வருகிறது. நேரத்தை ஆள முடியாது, ஆனால் நம் சக்தியை நாம் முறைப்படுத்த முடியும்.
ஒவ்வொரு மனிதரும் வேண்டுவது கருணையையோ, தன்னை சகித்துக்கொள்வதையோ அல்ல. மதிப்பையும், தன்னை ஏற்றுக்கொள்வதையும் தான்.
உங்களுக்கும் உடலுக்கும், உங்களுக்கும் மனத்திற்கும் ஒரு இடைவெளி உருவாக்கிவிட்டால் - அதுதான் உங்கள் துன்பங்கள் அனைத்திற்கும் முடிவு.
நீங்கள் உண்மை உணரும் தேடலில் உறுதியாக இருந்தால், எதைப்பற்றியும் யூகங்கள் வேண்டாம் - தேடலில் இருங்கள், போதும்.
உங்கள் அன்பு செலுத்தும் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. நீங்களே அன்பாக மாறிவிடும்போது, பிரபஞ்சத்தையே உங்கள் அன்பில் கொள்ள முடியும்.
எந்த ஒன்றுக்கும் நீங்கள் முழுமனதுடன் பொறுப்பு என உணரும்போது, அது உங்களுடையதாக ஆகிறது. உங்களுடன் தொடர்பில் வரும் அனைத்திற்கும் பொறுப்பு என உணர்வுபூர்வமாக பார்க்கும்போது பிரபஞ்சமே உங்களுடையதாக ஆகிவிடும்.
வாழ்வின் மிக அழகான விஷயங்கள் - காதல், இசை, நடனம், புது உருவாக்கம், சிரிப்பு - இவை எல்லாமே நான் என்பதை தள்ளி வைத்தால் மட்டுமே நடக்கும். தன்னைப் பற்றிய கவலையற்ற நிலையில் இருப்பதன் ஆனந்தத்தையும், பரவசத்தையும் உணர்வீர்களாக!
அன்பின் அரவணைப்பில், மகிழ்ச்சியின் மடியில், ஊக்கம் அளிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிட்டால், நாம் குழந்தைகளுக்கு பெரிதாக எதுவும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே அவர்களின் முழுமையான திறனுக்கு மலர்ந்து விடுவார்கள்.
ஒருவர் அறிவுரை கொடுக்கும்போது, அந்த அறிவுரை முதலில் அவருக்கு வேலை செய்திருக்கிறதா என்று எப்போதும் பாருங்கள்.
யோகா என்றால் பிரபஞ்சத்தின் வடிவ அமைப்புடன் பொருந்தும்படி நாம் அமைந்து கொள்வது. வெறுமனே ஒரு துளி படைப்பாக இருப்பதா, படைப்பின் மூலத்துடன் ஒன்றி அதன் பாகமாக வாழ்வதா - அது நம் கையில்தான் இருக்கிறது.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது இல்லை விஷயம். உங்களுக்குள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதே முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும்.