Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை சூழ்நிலைகள் நிர்ணயிக்காமல், சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயித்தால் - அதுதான் வெற்றி.
நீங்கள் தேர்வுசெய்தால், இந்தக் கணப்பொழுதில் நீங்கள் ஆனந்தமாக இருக்கமுடியும். நீங்கள் ஆனந்தத்தைத் தேர்வுசெய்தால் போதும்.
உங்களால் விழிப்பு நிலையில் இருந்து உறக்க நிலைக்கு விழிப்புணர்வாக நகர முடிந்தால், உயிர் வாழ்வதில் இருந்து மரணத்திற்கும் உங்களால் விழிப்புணர்வாக நகர முடியும்.
தேவையான சக்தி இல்லாவிட்டால் விழிப்புணர்வாக இருப்பது மிகவும் கடினம். அதற்குத்தான் ஆன்மீக சாதனா அல்லது யோகப் பயிற்சிகள் - உயிர்சக்தியைத் தூண்டுவதற்கு.
பூமித்தாயின் மடிதான் நமக்கு ஊட்டமளிக்கிறது. இயல்பாகவே, நாம் அவள் மீது மரியாதை கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் மனம் ஒரு நெருப்பு பந்தைப் போன்றது. உங்கள் மனதை உங்கள் வசப்படுத்தினால், அது சூரியனைப்போல ஆகமுடியும்.
ஒரு மனிதரானவர் ஒரு விதையைப் போன்றவர். ஒன்று, நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கலாம், அல்லது மலர்களும் கனிகளும் நிறைந்த ஒரு அற்புதமான மரமாக உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ளலாம்.
என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றியதல்ல. அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது.
நீங்கள் என்ன செய்தாலும் இதை கவனியுங்கள் - அது முற்றிலும் உங்களைப் பற்றியதா, அல்லது அனைவர் நல்வாழ்வுக்குமானதா. இது நல்ல கர்மாவா கெட்ட கர்மாவா என்பது குறித்த எவ்வித குழப்பத்தையும் தீர்த்துவிடும்.
நீங்கள் விரும்பும் விதமாக உங்களால் உங்களை உருவாக்கிக்கொள்ள முடிந்தால், உங்கள் விதியையும் நீங்கள் விரும்பும் விதமாக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
வசந்தத்தின் அழகே, கனி இன்னும் வரவில்லை என்றாலும், பூ அதற்கான வாக்குறுதியாகவும் வாய்ப்பாகவும் இருப்பதுதான்.