Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உங்கள் எண்ணம் எனும் ப்ரிஸம் மூலம் பார்த்தால், உலகமே பிரச்சனையாகத்தான் தெரியும். அன்பில், பேரானந்தத்தில் வரும் கண்ணீர் துளிகளின் வழியே பார்த்தால் உலகமே ஒரு வரம் ஆகும்.
வாழ்க்கை நிகழ முழுமையாக அனுமதித்தீர்கள் என்றால், தீவிரம் அடைவீர்கள். இந்த தீவிர நிலையில், உங்கள் முழு திறனில் இருப்பீர்கள்.
எந்த ஒரு உயிரையும் தெய்வீகமாக பார்க்கும்போது, உலகமே சொர்க்கமாக இருக்கிறது. உங்களுக்கு தியானம் செய்ய தெரிய வேண்டியதில்லை. பரிபூரண ஈடுபாடு உள்ளபோது, அனைத்துமே தியானம்தான்.
தேடலில் உண்மையாக இருக்கும் ஒருவர் எப்போதும் தன் குருவை கண்டு அடைவார்.
கருத்துகளை சார்ந்த அறிவு அறிவாளர்களின் வழி. கிரகித்து உண்ர்வதே யோகியின் வழி.
உணர்வுகளில் உராய்வை உருவாக்கும்போது, வெறுப்பாக மாறுவீர்கள். உங்கள் உணர்வுகளில் அருளை உருவாக்கினால், அன்பாக மாறுவீர்கள்.