Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
மண் என்பது உயிருள்ள விஷயம் - அது நமக்கு சொந்தமானது அல்ல, நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பாரம்பரியம். அது உயிருள்ள மண்ணாகவே இருக்கும்படி அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்துவிட்டு போகவேண்டும்.
தனக்குள் எப்போதும் தளர்வான நிலையில் இருப்பவரால் ஓயாமல் செயல் செய்ய முடியும்.
உங்கள் பணம், உறவுகள், குடும்பம் இவைதான் உங்கள் காப்பீடு என்று நினைக்க வேண்டாம். எல்லா நிலைகளிலும் உங்களை நலமாக வைத்துக்கொள்வது எப்படி என உணர்ந்து கொள்வதே நிஜமான காப்பீடு. அதுதான் யோகா.
எல்லோரும் உங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால், குறுகிப் போய்விடுவீர்கள். நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியம்.
நீங்கள் ஒவ்வொருவரும் தியானலிங்கத்தை அனுபவபூர்வமாக உணர வேண்டும் - அதுவே என் விருப்பம், அதுவே என் ஆசி! உலகில் நீங்கள் எங்கே இருந்தாலும், இந்த சாத்தியத்திற்கு திறந்த நிலையில் இருந்தால், ஆன்ம விடுதலைக்கான விதை உங்களுக்குள்!
அறியாமையில் இருப்பது ஆனந்தம்தான் - யதார்த்தம் வந்து மோதும் வரை.
உங்கள் மனமே உள்ளிருந்து உங்களை, ஒரு நாளில் ஆயிரம் முறை கத்தி போல குத்தலாம். மனம் என்பது துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவும் இருக்க முடியும், அல்லது ஒரு அதிசயமாகவும் இருக்க முடியும் - அது நீங்கள் தேர்ந்ததெடுப்பதுதான்.
நீங்கள் எடுக்க வேண்டிய முதல் படி - ‘என்ன நடந்தாலும், என் வாழ்க்கை என்னுடைய பொறுப்பு’ என்பதை உள்ளபடி பார்ப்பதுதான்.
கொடுப்பதிலே இருக்கிறது மனநிறைவு.
நம் வாழ்வின் அனுபவம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது, நாம் செய்யும் செயலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் - இதுதான் வாழ்க்கையில் முக்கியம்.
உண்மையாக இருப்பது ஒரு ஒழுக்கமோ, நெறிமுறையோ அல்ல. நீங்கள் இருக்கும் விதம், யோசிக்கும் விதம், செயல்படும் விதம், இவை ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதை பற்றியது.
ஒப்பிட்டு பார்ப்பதன் அடிப்படையில் வரும் புரிதல் ஒருபோதும் உண்மையானது அல்ல - அது நிஜத்தை திரித்து பார்ப்பதாகும்.