Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
விருப்பமற்ற நிலையிலிருந்து விருப்பத்திற்கும், மந்தத்தன்மையில் இருந்து உற்சாகத்திற்கும் நீங்கள் நகர்ந்தால், உங்கள் வாழ்க்கை ஆனந்தமாகவும் முயற்சியின்றியும் நிகழும்.
நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உண்மையாகவே தேவையானது எதுவோ அதைத்தவிர வேறெதையும் செய்யமாட்டீர்கள்.
மாமனிதர் ஆவதற்கு ஆசைப்பட வேண்டிய அவசியமில்லை. 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற கவலையைக் கடந்து சென்றால், நீங்கள் எப்படியும் மாமனிதராகத்தான் இருப்பீர்கள்.
உங்களை நீங்களே துயரமாக்கிக்கொள்ள விரும்பினால், அதற்கு முடிவில்லா வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் எப்போதும் யாரோ ஒருவர் உங்களுக்குப் பிடிக்காத ஏதோவொன்றைச் செய்வார்கள்.
யோகா என்ற சொல்லுக்கு சங்கமம் என்று பொருள். அதாவது உங்கள் தனித்தன்மையின் எல்லைகளை விழிப்புணர்வாக அழித்து, நீங்கள் அண்டத்துடன் சேர்ந்து அதிர்வது.
தியானலிங்கத்தின் வளையத்திற்குள் அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்திருந்தால் போதும், அது தியானத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும் ஆழ்ந்த தியானநிலையை உணர்த்தும்.
உயிர், அனைத்தையும் தன் பாகமாக சேர்த்திருக்கும் தன்மையுடையது. உங்கள் மனம் மட்டும்தான் தனித்து இருக்கிறது.