Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
நீங்கள் யாரை சந்தித்தாலும், அவருடன் பேசுவதற்கான கடைசி சந்தர்ப்பத்தைப் போலப் பேசுங்கள். அது உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.
ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு இல்லை, என்ன தேவையோ அதை அப்படியே செய்யும் புத்திசாலித்தனத்துடன் இருப்பது.
உயிர் தோல்வி அறியாது. தோல்வி என்பது தங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான்.
ஐயம் நல்லது - நீங்கள் உண்மையைத் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். சந்தேகம் என்பது ஒரு நோய்.
ஒரு ஆணின் உலகிற்குள் ஒரு பெண் பொருந்தவேண்டி இருக்கக்கூடாது. பாதி உலகம் எப்படியும் அவளுடையதாக இருக்கவேண்டும்.
உங்கள் கவனத்தின் ஆழம்தான் உங்கள் அனுபவத்தின் ஆழத்தை நிர்ணயிக்கிறது. உங்கள் கவனம் ஆழமாக இருந்தால், உங்கள் வாழ்க்கை அனுபவமும் ஆழமாக இருக்கிறது.
உங்கள் ஆளுமைத்தன்மை எந்த அளவு இறுக்கமின்றி இருக்கிறதோ, அந்த அளவு உங்கள் இருப்பு சக்திவாய்ந்ததாய் இருக்கும்.
மனிதர்கள் தங்களுடைய ஞாபகங்களினாலும் கற்பனையினாலும் வேதனைப்படுகிறார்கள். அதாவது எது இல்லையோ அதனால் வேதனைப்படுகிறார்கள்.
ஒருவருடன் உங்களால் எவ்வளவு அழகாகத் தொடர்புகொள்ள முடிகிறது என்பது உங்கள் விருப்பம், வளைந்துகொடுக்கும் தன்மை, மற்றும் மகிழ்ச்சியை சார்ந்தது.