Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
நீங்கள் எந்த அளவு விசேஷமானவராக இருக்க முயல்கிறீர்களோ, அந்த அளவு காயப்படுவீர்கள். வெறுமனே இருங்கள், கரைந்திடுங்கள், காற்றுடனும் மண்ணுடனும் அனைத்துடனும் ஒன்றாகக் கலந்திடுங்கள். இந்த படைப்பு விரும்புவதும் அதைத்தான்.
நீங்கள் கட்டாயத்தினால் எதிர்செயல் செய்தால், நீங்கள் தற்போது இருக்கும் நிலையை வெளிசூழ்நிலைகள் நிர்ணயிக்கும். நீங்கள் விழிப்புணர்வுடன் பதில்செயல் செய்தால், உங்கள் நல்வாழ்வு முற்றிலும் உங்கள
இது மிகவும் குறுகிய வாழ்க்கை - உங்களுக்கு எதன்மீது உண்மையான அக்கறை இருக்கிறதோ அதைச் செய்வதுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான ஒரே வழி.
ஆனந்தமாகவும், பொறுப்பாகவும், சிறிதளவு புத்திசாலித்தனத்துடனும் இருக்கும் ஒரு மனிதரால், அனைத்தையும் மிகவும் சீரியஸாக அணுகும் ஒருவரை விட, சவாலான சூழ்நிலைகளை வெகுசிறப்பாக கையாளமுடியும்.
இந்த நாளும் காலமும், உள்வாங்கிக்கொள்ளவும், அருள்பெறவும், ஞானமடையவும், முக்தியடையவும் உகந்தது. அனைத்திலும் உயர்ந்ததை அடைய ஊக்கம் பெறுவீர்களாக!
யாரோ ஒருவருக்கு வலிக்கும்போது அது உங்களுக்கு வலிக்கவே இல்லை என்றால், உங்கள் மனிதத்தன்மையை நீங்கள் கைவிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
அடிப்படையில் பயம், கோபம், வெறுப்பு போன்றவை, வாழ்க்கை எதைப் பற்றியது என்ற சரியான பார்வை இல்லாததால் வருகிறது.
வாழ்க்கையுடன் நீங்கள் சற்றே விளையாட்டாக இருந்தால், ஒவ்வொரு கணப்பொழுதும் கொண்டாட்டமாக இருக்கும்.
ஒரு மனிதராக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக இல்லை, நீங்கள் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறீர்கள், தொடரும் ஒரு செயல்முறையாக இருக்கிறீர்கள். எதுவும் வரையறுக்கப்படவில்லை, நீங்கள் எப்படி இருக்க விரும்பினாலும் அப்படி இருக்கமுடியும்.
உங்களிடம் என்ன இருந்தாலும் - உங்கள் திறன்கள், அன்பு, ஆனந்தம், படைப்பாற்றல், செயலாற்றல் - எல்லாவற்றையும் இப்போதே வெளிப்படுத்துங்கள். இன்னொரு பிறவிக்காக அதை சேமித்து வைக்க முயற்சிக்காதீர்கள்.
உலகினை நாம் கட்டமைக்கும் முன், மிக முக்கியமாக நிகழவேண்டியது, நீங்கள் இருக்க விரும்பும் விதமாக உங்களை நீங்களே கட்டமைப்பதுதான்.