உலக யோகா தினத்தை முன்னிட்டு, "யோகா" என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதையை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு நம்முடன் பகிர்கிறார். யோகா என்று இதுவரை நீங்கள் அனுபவித்து அறிந்திராத ஒன்றை வார்த்தைகளால் உணர்த்தமுடியாது எனினும், உணர்த்த முயன்று கவிதையாய் வடித்துள்ளார். படித்து மகிழுங்கள்.

யோகா

உன் முகம் பாறைபோலிருக்க,
பார்ப்போர் உனை அன்பில்லா சிறுக்கியென நினைப்பர்
எனக்கோ நீயொரு காதலியின் கவிதை போல
வசந்தத்தின் தென்றலைப் போல மென்மையாய்
காய்த்துக்குலுங்கும் மாமரமாய்
ஒவ்வொரு இலைமறைவிலும் கனிதாங்கி நிற்கின்றாய்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெற்றாகவும் குறைவாகவுமே
உன் மூதாதையர் உனை விவரித்துள்ளனர்
நீ இன்பத்தை அள்ளிக்கொடுக்கும் இளவஞ்சியென
எவரும் அறியமாட்டார்

சாதாரண துணியுடுத்தி நிற்கின்றாய்
நீ இருப்பதோ
அசாதாரணமான சாத்தியமாய்
என யார் நினைத்திருப்பார்கள்

உனைக் கண்டுகொண்டு
தளரா நெஞ்சத்துடன் பின்தொடர்ந்தேன்

மூன்று ஜென்மங்களாய்
உனக்காக காத்துக்கிடந்தேன் காதல்கொண்டேன்

உன் காலடித்தடம் தொடர்ந்து அறியா தேசங்களாம்
சொல்லவொண்ணா வலி இனிப்பு இரண்டும் கண்டேன்
இப்பயணமே எனை முழுமையாக்கி விட்டது -
படைப்பும் படைத்தவனும் என்னுள் உள்ளனர்

இனி நீயின்றி இவ்வுலகை என்னால் பார்க்கமுடியாது

Love & Grace