ஜூலை 27ல் ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தில் இணையுங்கள்! ஈஷா யோகா மையத்தில் நேரடியாகவோ அல்லது நேரடி இணைய ஒளிபரப்பு மூலமாகவோ கலந்துகொள்ளுங்கள்!

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்

கேள்வி: சத்குரு, சப்தரிஷிகளுக்கு யோகத்தின் ஏழு அம்சங்களில் ஒவ்வொன்றை ஒருவருக்கு ஆதியோகி பரிமாறியதாக தாங்கள் குறிப்பிட்டீர்கள். ஆதியோகியின் முழுமையான ஞானத்தை ஏன் ஒவ்வொரு சப்தரிஷியும் பெற்றுக்கொள்ள இயலவில்லை? சாதாரணமான ஒரு மனித உடல் உள்வாங்குவதற்கான வரையறை என்ற ஒன்று இருக்கிறதா?

சத்குரு:

இதற்குப் பல அம்சங்கள் உண்டு. மனித உடலானது பல அடுக்குகளை அல்லது பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. நாம் பல தருணங்களில் 114 - சக்கரங்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். முழுமையான மலர்ச்சியடைந்த ஒரு உடலில், இந்த 114 - சக்கரங்களும், 114 – சாத்தியங்களாக இருக்கின்றன. இருப்பினும், 21 – சக்கரங்கள் மட்டுமே இயங்கினாலும், ஒரு மனிதர் முழுமையான அளவில் உடல்தன்மையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். உங்களுக்கான எல்லாமே சிறப்பாக இருக்கும். உங்களது உடலும், மனமும் நன்றாகச் செயல்படும் என்பதுடன் நீங்கள் போதுமான அளவுக்கு வெற்றிகரமானவராக இருப்பீர்கள். கூடுதலாக சில சக்கரங்கள் இயங்கினால், சட்டென்று அந்த நபர் ஏதோ ஒரு விதத்தில் தலைசிறந்து விளங்குகிறார். மேலும் பல சக்கரங்கள் இயங்கினால், அந்த நபர் அசாதாரணமாகத் தோன்றுவார்.

ஆகவே, இந்த வகையில் பார்த்தால், ஒரு சராசரி மனிதரால் கண்டடையாமல் விடப்பட்டுள்ள முழுமையான ஒரு பெரும்பரப்பு இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது. உணர்தல் மற்றும் ஆய்ந்தறிதலின் அடிப்படையில் பார்த்தால், ஒரு சராசரி மனிதர் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நிலையிலேயே இருக்கிறார். இன்னமும் தேடிக் கண்டடைய வேண்டியது தொண்ணூறு சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு பௌதீக உடலைத் தயார்படுத்துவதற்குத் தேவையான நீண்டகாலச் செயல்முறையில் ஆதியோகி குறைபாடுகளைக் கண்டிருக்கவேண்டும். நான் உடல்ரீதியான வலிமையை இங்கே குறிப்பிடவில்லை.

இந்த ஏழு சப்தரிஷிகளும், ஏழு வெவ்வேறு பரிமாணங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் தன்னளவில் மகத்தான மனிதர்களாக இருந்தபோதிலும், அவர்கள் யோக வழிமுறைகளில் முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அவ்வளவு விஷயங்களையும் செய்வதற்குப் போதுமான காலம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆகவே, ஏழு வித்தியாசமான பரிமாணங்களுக்கும் தனித்தனியாக ஏழு பேரைப் பயிற்றுவித்து, அதை உலகத்திற்கு வழங்குமாறு செய்வது எளிதாக இருந்திருக்கக்கூடும்.

ஆதியோகி, ஒரு பௌதீக உடலைத் தயார்ப்படுத்துவதற்குத் தேவையான நீண்டகாலச் செயல்முறையில் குறைபாடுகளைக் கண்டிருக்கவேண்டும். நான் உடல்ரீதியான வலிமையை இங்கே குறிப்பிடவில்லை. சக்தி உடலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வலிமையுடனும், துடிப்புடனும் வளர்ச்சியடையச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. பல விதங்களில், முன்னெப்போதையும் விட இப்போதைய தலைமுறை மிகுந்த பலவீனமாக இருக்கிறது. உடல் பலத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் – உடலுக்கான வேலை குறைந்துவிட்ட காரணத்தால் மற்ற எந்த தலைமுறையை விடவும் நாம் அதிக பலவீனமானவர்களாக இருக்கிறோம் – சக்தி உடல்களின் அமைப்பிலும், நாம்தான் மிகுந்த பலவீனமான தலைமுறையினர். அவர்களுக்குள் உபயோகமான ஏதோ ஒரு விஷயத்தை மக்களுக்குச் செய்வதற்கு முன்பு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் அவர்கள் தங்களது சம நிலையை இழந்து, சிதறி விழுகின்றனர். கடைசி ஐந்திலிருந்து ஆறு தலைமுறைகளில், இயற்கை சக்திகளிலிருந்து மெல்ல விலகிச் சென்று மிகவும் பாதுகாப்பான சூழல்களுக்குள் நாம் தஞ்சமடைந்துவிட்டோம். இந்தக் காரணத்தால், சக்தி உடலானது மிகவும் எளிதில் உடையக்கூடியதாகவும், பலவீனமாகவும் ஆகிவிட்டது.

ஆனால், அன்றைக்கு ஆதியோகியைச் சுற்றிலும் மேலான உடல்கள் இருந்திருப்பது நிச்சயம். இருப்பினும் இந்த முறையைக் கையாள்வதை அவர் எளிதாகக் கண்டிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பரிமாணத்தில் பயிற்றுவிக்கப்பட, பிறகு அவர்கள் வெளி உலகில் அதைப் பரப்பினர். அது அவருடைய தீர்மானம். அதை நான் கேள்வி கேட்பதற்கில்லை. அன்றைக்குச் சாத்தியமான சிறந்ததை அவர் செய்தார் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன்.

ஆதியோகிக்கான குருதட்சணை

adiyogi-gurudakshinai-tamil2018

ஆதியோகி அவர்களுக்குள் பொழிந்த ஞானத்தை உலகின் பல பகுதிகளுக்கும் பரப்புவதற்காக ஏழு சப்தரிஷிகளும் கிளம்பிய அந்தத் தருணத்தில், வழக்கத்திற்கு மாறான வகையில் ஆதியோகி கூறினார், “குருதட்சணை எங்கே? என்னிடம் கற்றுக் கொண்டதற்கான கட்டணம் எங்கே?” ஏழு ரிஷிகளும் திகைத்தவர்களாக, “கட்டணமா? எங்கள் வாழ்க்கையே நீங்கள்தான். எங்களிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றனர். அவர்கள் அவருடன் கணக்கற்ற காலம் தங்கியிருந்த நிலையில் அவர்களிடம் இருந்ததெல்லாம் உடலோடு ஒட்டியிருந்த இடைக்கச்சை மட்டும்தான். அங்கே கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? மேலும் அது முற்றிலும் வழக்கத்திற்கு மாறானது – ஆதியோகி கட்டணம் ஒன்றைக் கேட்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை!

ஆயிரம் ஆண்டுக்காலம் போல் உணர்ந்த பல நூறாண்டுகள் அவர்கள் அவருடனேயே இருந்துவிட்டனர். அவரைத் தவிர்த்து அவர்கள் வேறெதையும் அறிந்திருக்கவில்லை.

உடலமைப்பில் மிகவும் குள்ளமானவராக இருந்த அகத்திய முனிவர், இதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டார். அவர் கூறினார், “ மிகவும் மதிப்பு வாய்ந்ததாக என்னிடம் உள்ள ஒரே விஷயம்” – ஏனெனில் உங்களது குருவுக்கு நீங்கள் ஏதாவது சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால், உங்களுக்கு விலைமதிப்பு மிகுந்த ஒன்றையே நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் – “ இந்த உடல் எனக்கு ஒன்றுமில்லை, இல்லையென்றால் இதை உங்களுக்கு நான் சமர்ப்பணம் செய்திருப்பேன். இத்தனை ஆண்டுக்காலங்களில் உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட ஞானம் ஒன்றுதான் உண்மையிலேயே எனக்கு விலைமதிப்பற்றது. இதோ, எனக்குத் தாங்கள் வழங்கிய ஞானத்தின் பதினாறு பரிமாணங்கள், இதுவே உங்களுக்கான எனது அர்ப்பணம்.” அவர் அதனை குருவின் பாதத்தில் சமர்ப்பித்தார். குறிப்பறிந்துகொண்ட மற்ற ஆறு பேரும், ஒருவர் பின் ஒருவராக அதையே செய்தனர். பிறகு ஆதியோகி,“ ஏற்றுக்கொள்ளப்பட்டது, இனி உங்களது பயணம் தொடரட்டும்”, என்றார்.

ஆயிரம் ஆண்டுக்காலம் போல் உணர்ந்த பல நூறாண்டுகள் அவர்கள் அவருடனேயே இருந்துவிட்டனர். அவரைத் தவிர்த்து அவர்கள் வேறெதையும் அறிந்திருக்கவில்லை. இப்போது, மிகுந்த பிரயாசைப்பட்டு, பல வருடங்களாகக் கற்றுக்கொண்டதையும் அவர்கள் தம் குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு, வெறுங்கைகளுடன் நடந்துசென்றனர்.

அவர்கள் வெறுங்கையுடன் நடந்து சென்ற காரணத்தால், குருவின் இருப்பின் வாயிலாக 112 – வழிகள் அனைத்தும் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இடம் பெற்றுவிட்டது. அவர்களில் அவரே உயிரோட்டமாகிவிட்டார். இல்லையென்றால், அவர்களுக்குள் 16 – மட்டுமே இருந்திருக்கும். அவர்கள் இப்போது எல்லையற்றவர்களாகிவிட்டனர் ஏனென்றால், கடுமையான முயற்சியின் பலனாக அவர்கள் பல ஆண்டுக்காலங்களாக எதையெல்லாம் கற்றுக்கொண்டார்களோ, அதை அவரது பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு, வெறுங்கையுடன் விலகி நடந்தனர்.

ஆசிரியர் குறிப்பு :  ஜூலை 27ல் ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தில் இணையுங்கள்! ஈஷா யோகா மையத்தில் நேரடியாகவோ அல்லது நேரடி இணைய ஒளிபரப்பு மூலமாகவோ கலந்துகொள்ளுங்கள்!

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்

சத்குரு App... இப்போது தமிழில்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்... இலவசமாக