'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் – இவைகளில் எதை வேண்டுமானாலும் அவைகளின் அடிப்படை இரசாயன தத்துவத்தை மாற்றாமலே அவைகள் முற்றிலும் மாறுபட்டு நடந்து கொள்ளச் செய்ய இயலும்.

உண்மையில் ஈஷா யோக மையத்தின் தனித் தன்மையே அதுதான். வெற்றிடத்தின் மூலக் கூற்றின் நடத்தயை மாற்றி அமைக்க முடிந்தால், நீங்கள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றிலிருந்து, பஞ்சபூதங்களின் குணங்களை வாழ்வாதாரத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்ள வைக்க முடியும். அதே போல் அதற்கு எதிர் மறையாகவும் மாற்ற முடியும்.

இதுதான் ஆரோக்கியத்திற்கும் வியாதிக்கும் உள்ள வித்தியாசம்; மன நிம்மதி மன உளைச்சல், மகிழ்ச்சி-துக்கம், அவஸ்தை-பரவசம், இது எல்லாமே. நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் குடிக்கும் நீர், நீங்கள் நடக்கும் இந்த நிலம் எல்லாவற்றின் நடத்தையுமே மாறும். ஒரே காற்றை சுவாசித்தும், ஒரே நீரை குடித்தும் கூட சிலர் வியாதியையும், சிலர் ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறார்கள். பூதங்களை விழிப்புணர்வு இல்லாமல், ஏனொ-தானோவென்று கையாண்டால், அவை வேறு விதமாக நடந்து கொள்ளும். நம்மால் விழிப்புணர்வுடன் கையாள முடியும்.

தீர்த்தம் என்பது உள்ளேயிருந்து பேசும் ஒரு மொழி. தீர்த்தக்குண்டத்தில் உள்ள நீரை ரசாயன முறையில் பரீட்சித்துப் பார்த்தால், 100% உள்ளே வரும் நீரைப் போலத்தான் இருக்கும் ஆனால் உணர்வில் இது முற்றிலும் மாறுபட்டது.

நமது முழு செயலுமே இந்த உடலை பிரதிஷ்டை செய்து தெய்வீகத்தன்மையை உள்ளடக்குவதுதான். வெறும் எலும்பையும் சதையையும் தெய்வீகமாகுவது. இந்த எலும்பும் சதையுமான உடலை நடமாடும் கோவில்களாக்குவதுதான் என் கனவு.