நவராத்திரி திருவிழாவிற்கு முந்தய , நாள் தனித்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசை – நம் முன்னோர்களுக்கும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்கும் நன்றி வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அக்னி அர்ப்பணையோடு முன்னோர்களுக்காக செய்யப்படும் கால பைரவ சாந்தி – செயல்முறையும் நிகழ்த்தப்படும்.

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரைப் போற்றும் வகையில் நவராத்திரி கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட்களும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு நிறமாக, லிங்கபைரவி மூன்று வெவ்வேறு நிறங்களில் காட்சி தருவாள். நவராத்திரி பூஜை நிகழும் இந்த ஒன்பது நாட்களும் தேவியின் அருளைப் பருக நமக்கு கிடைக்கும் ஒரு அற்புத வாய்ப்பாக அமைகிறது. பூஜையைத் தொடர்ந்து லிங்கபைரவி ஊர்வலம் மற்றும் மஹா ஆரத்தி.ஆகியவை நடைபெறும்.

நவராத்திரிக்கு அடுத்த பத்தாம் நாளாக வரும் விஜய தசமி, குழந்தைகள் தங்கள் கல்வியை துவங்குவதற்கான ஒரு உன்னத நாளாக பார்க்கப்படுகிறது. லிங்கபைரவியில் விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்வியைத் துவங்குவதற்கென சிறப்பு வித்யாரம்பம் நிகழவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் அருகிலிருக்கும் கிராமங்களில் உள்ள கிராமப்புற குழந்தைகளுக்கென சிறப்பு வித்யாரம்பம் நிகழும்.