மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தக்க நிவாரணி வாதநாராயணன் கீரை. இந்த வாதநாராயணன் கீரைக் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள், பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.

தேவையான பொருட்கள்:

வாத நாராயணன் கீரை - 1 கப்
துவரம்பருப்பு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1½ ஸ்பூன்
தனியா தூள் - 1½ ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க
கடுகு, உளுந்து, எண்ணெய்

செய்முறை:

  • துவரம்பருப்பை வேகவைத்து வெந்ததும் அதை நன்கு கலந்து, அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிவரும்போது கீரையை சேர்த்து சிறிது நேரம் வேகவிடவேண்டும்.
  • அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, அதை வெந்து கொண்டிருக்கிற கலவையில் சேர்க்க வேண்டும்.
  • கீரை வெந்ததும் புளி ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, சுவைக்கேற்ப சிறிது உப்பு சேர்த்து, மெல்லிய தீயில் வைத்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • மணமான, சுவையான, சத்தான கீரை சம்பார் ரெடி.

இதன் பயன்கள்:

  • மழை காலம், வெயில் காலம் என்று எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம்.
  • நரம்புகளை பலப்படுத்தும்.
  • கை, கால் முடக்கத்தை போக்கும்.
  • ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • முட்டி வலிக்கு சிறந்த வலி நிவாரணி, மலக்கட்டை நீக்கி, குடலை சுத்தப்படுத்தும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.