எந்தவொரு விவசாயிக்கும் இது ஒருபோதும் ஏற்படக்கூடாது!

“விவசாயிகள் நல்வாழ்வு திட்ட பிரச்சாரத்தின்போது, தான் சந்தித்த விவசாயிகளின் வேதனையை தாங்க முடியாமல் தன்னார்வலர் அனுப் வெளிப்படுத்திய வார்த்தைகள் - “இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்தவொரு விவசாயிக்கும் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.

மேலும் கூறுகையில், “நான் இந்த குறிப்பிட்ட கிராமத்தை அடைந்தபோது, குடிபோதையில் இருந்த பல விவசாயிகளைக் கண்டேன் - அவர்களின் கண்கள் சிவந்திருந்தன. அவர்கள் சோகமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தனர். ‘அவர்கள் ஏன் பகல் நேரத்தில் குடிபோதையில் இருக்கிறார்கள்?’ என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

"இவை அனைத்தையும் மீறி, வேளாண்காடு வளர்ப்பு அவர்களின் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கை போராட்டங்களை எப்படி எளிதாக்கும் என்று எங்கள் தமிழ் பேசும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு விளக்கிக்கொண்டு இருக்கையில், நான் வெறுமனே நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த விவசாயிகளில் பலர் எங்கள் பேச்சைக் கேட்டபின் வேதனையடைந்து, சோகமாகிவிட்டதை நான் கவனித்தேன். நான் ஒரு தன்னார்வலரிடம், ‘நீங்கள் சொல்வதை அவர்கள் விரும்புவதாகத் தெரியவில்லையே என்ன ஆயிற்று?’ என்று கேட்டபோது, அவர் கூறிய பதில் நான் எதிர்பார்த்திராத ஒன்று.

“அவர்கள் கூறியது, ‘இதையெல்லாம் கேட்க எங்களுக்கு சற்று தாமதமாகிவிட்டது. சுமார் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கடன்களை அடைப்பதற்காக எங்கள் நிலங்களை விற்றுவிட்டோம். இப்போது நாங்கள் வெறும் கூலித் தொழிலாளர்கள், எங்கள் அடுத்தவேளை உணவு எப்போது கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எங்கள் குழந்தைகளும் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.

இதைக் கேட்டு “கண்ணீரை அடக்கும் முயற்சியில் நான் அசைவற்று நின்றேன். நமக்கு உணவு வழங்கி வந்த நம்முடைய விவசாயிகளின் நிலைமை இதுவா? இதை என்னால் நம்பமுடியவில்லை. சத்குரு முன்னெடுத்திருக்கும் காவேரி கூக்குரல் மேலும் தாமதமாகாமல், விரைவில் கைகூடும் என்று நான் நம்புகிறேன்.” இந்த திடுக்கிடும் உண்மையை அந்த விவசாயி விவரிக்கையில், அனுப் அவருக்குப் பக்கத்தில் ஆழ்ந்த துக்கத்துடன் நின்றிருந்தார்.

sadhguru-isha-on-the-farmers-trail-cauvery-calling-spirited-warriors-on-ground-5

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் உண்மை நிலை இதுதான். கொஞ்சம் நிலம் வைத்திருப்பவர்கள், நீர்வளங்கள் இல்லாமல் நடைமுறைக்கு மாறான மற்றும் காலாவதியான விவசாய நுட்பங்களை வைத்துக்கொண்டு, அவர்களால் நிலத்தில் விவசாயத்தைத் தக்கவைக்க முடியவில்லை. பல தலைமுறைகளாக தங்களுக்கு உணவளித்த நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு முன்பு காப்பாற்ற முயற்சிக்கும்போது அவர்கள் கடன்களைக் குவிக்கின்றனர். பின்னர் தொடர் தோல்வியினாலும், முழு விரக்தியிலும் அவர்கள் நிலத்தை விற்றுவிடுகிறார்கள். தண்ணீர் மற்றும் நல்ல வளமான மண்ணை மட்டுமே சார்ந்துள்ள ஒரு வணிகத்தை எவ்வாறு பராமரிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

வேற்றுமையிலும் ஓர் ஒற்றுமை

காவேரி கூக்குரல் இயக்கத்தின் முதல் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களில் ஒருவர் அனுப் என்பவர். டெல்லி, மும்பை, பெங்களூரூ, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தன்னார்வலர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களில் சிலர் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வணிகர்கள். அவர்கள் அனைவரும் நம் விவசாயிகளுக்கு மிகவும் தேவைப்படும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க தங்களின் ஓய்வில்லாத கால அட்டவணையில் கொஞ்சம் பகுதியை இதற்காக ஒதுக்கிக்கொண்டனர். விவசாயிகளின் இந்த சந்திப்பு அவர்களில் பலரும் இதற்கு முன்பு அனுபவிக்காத வகையில் அவர்களை உலுக்கியது என்றாலும், இந்த நிலை மாற வேண்டும் என்ற உணர்ச்சி அவர்களின் பணிகளை உற்சாகப்படுத்தியது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான முறையில் மிகவும் கொண்டாடத்துடன் தங்களை இந்த சேவைக்காக இணைத்துக் கொண்டார்கள். இந்த பயணத்தில் அவர்களின் தடையற்ற உற்சாகத்தின் ஒரு பார்வை இங்கே உங்களுக்காக.

களத்தில் உணர்வு மிக்க வீரர்கள்

sadhguru-isha-on-the-farmers-trail-cauvery-calling-spirited-warriors-on-ground-4

சுவாமி பிரஜகாரா ஒரு ஈஷா பிரம்மச்சாரி, கர்நாடகாவில் “இக்கணமே செயல்படுவோம்” என்ற காவேரி கூக்குரல் இயக்கத்தை வழிநடத்தி செல்பவர் இவர். இந்த "உற்சாகம் மிகுந்த தன்னார்வக் குழுவைப் பற்றி கூறுகையில், நாங்கள் இங்கே இருப்பதை எப்படி கூறுவது! நேற்றிலிருந்து, இடைவிடாத மழை பெய்து வருகிறது, மேலும் தங்குமிட வசதிகள் அவ்வளவு வசதியாக இல்லை. இரவில் உள்ள குளிரின் காரணமாக, யாரும் சரியாக உறங்குவதே சந்தேகம்தான். இருந்தும், நம் தன்னார்வலர்கள் அதற்கு விதிவிளக்காக, அனைவரும் காலை சாதனாவிற்கு பிறகு! 7:30 மணிக்குள் களப்பணிக்கு செல்லத் தயாராக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தைதான் ஏற்படுகிறது” என்கிறார்.

“நாங்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், பலதரப்பட்ட வயதுடையவராக இருந்தாலும் - சத்குருவின் வேளாண் காடுகள் செய்தியை கிராம மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற ஒரு பொதுவான கொள்கையை கொண்டவர்கள். இதுதான் வேற்றுமையில் ஒரு உண்மையான ஒற்றுமை என்று உணர்த்துகிறது. இங்கே மொழி என்னை சற்று ஊனமாக்கி வைத்தாலும், நோக்கமும் செயலும் அதையும் மீறி உயர்கிறது. கிராமத்திலுள்ள மக்கள் பலர், எனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து, அடுத்த முறை இங்கே வருவதற்குள் கன்னட மொழியை கற்று அவர்களுடன் கன்னடத்தில் பேசும்படி கேட்டுக்கொண்டனர்”

“இந்தியாவில் தாராள மனப்பான்மை இன்னமும் அதன் கிராமங்களில் வாழ்கிறது. அவர்களது கிராமத்துக்கு வருகை தரும் ஒரு விருந்தினரை அவ்வளவு இதமாக, திறந்தமனதுடன், முழுவிருப்பத்துடன் இணைத்துக்கொள்வது மிகவும் வியப்புக்குரியது. அவர்கள் மிகச் சிறிதளவே வைத்திருந்தாலும், அதை நகரத்திலிருந்து சென்ற எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர். நம்மிடமோ அதிகமாக இருக்கிறது. ஆனால், பகிர்ந்துகொள்ளும் உணர்வு குறைவாக இருக்கிறது,” என்று தொழில்முனைவோராக இருக்கும் ஷில்பி என்ற தன்னார்வலர் கூறினார். கிராமப்புற இந்தியாவின் அழகைக் கொண்டாடும் இவர், அவரது அனுபவத்தை இங்கே பகிர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீங்கள் பகிர்ந்துகொள்வதற்கு உங்களிடம் அதிகமாக இருக்கவேண்டிய தேவையில்லை. உண்மையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அந்த அளப்பரிய மனப்பான்மைதான் தேவை. அதை நாங்கள் இங்கே அனுபவிக்கிறோம் என்று இந்த வலைப்பதிவை வாசிக்கும் நகரவாசிகளிடம் வேண்டிக்கொள்கிறார்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பிற்கு மிகவும் ஆர்வம் காட்டினர், ஆனால் அவர்களுக்கு தேவைப்படும்போது அறுவடை செய்ய அனுமதிக்கும் ஒரு கொள்கையுடன் அரசாங்கத்தின் ஆதரவு தேவை. அவர்கள் தங்கள் மரங்களை வெட்ட விரும்பும்போது அவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது” என்று கடந்த சில நாட்களாக கிராமத்தைச் சேர்ந்த குழுவில் அங்கம் வகித்த மற்றொரு தன்னார்வலர் பகிர்ந்துகொண்டார்..

sadhguru-isha-on-the-farmers-trail-cauvery-calling-spirited-warriors-on-ground-3

ஒரு நாள், எங்கள் பிரச்சார பகுதி நஞ்ஜண்கூடு அருகே இருந்தது, அங்கு பலத்த மழை பெய்தது, இதனால் வெளிச்சம் குறைவாக இருந்தது, பகல் நேரத்தில் கூட மிகவும் இருட்டாக இருந்தது. காலையில் குருபூஜைக்குப் பிறகு, எங்கள் ஒருங்கிணைப்பாளர், இதுபோன்ற வானிலையில் நாங்கள் வெளியேற தயாராக இருக்கிறோமா என்று கேட்டார். அவருக்கு உரத்த குரலில் “ஆம்” என்று பதில் கொடுத்தோம். அது இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கிறது. அந்த அளவிற்கு உற்சாகம் மிகுந்தவர்கள் இந்த வீரர்கள்” என்று ஒரு தன்னார்வலர் நினைவு கூர்ந்தார்.

விவசாயிகள் நன்றாக வாழ வேண்டும், காவேரி தனது முழு அழகுடன் பாய்வதையும் உறுதி செய்வதற்காக, களப்பணியில் இருக்கும் இந்த உற்சாகமான வீரர்களுடன் சேருங்கள் - சோர்வில்லாமல் வீடு வீடாக சென்று ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து பொருளாதார மற்றும் உண்மையான நல்வாழ்வு பற்றிய செய்தியை எடுத்துச் செல்லும் இந்த வீரர்களின் அனுபவங்களை மேலும் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

CC-ISO-WebBanner-650x120-Tam