தனது 18 வயது மகள் கேட்ட ஒரு கேள்வி அவரை மூன்று வருடங்கள் பின்னோக்கி கூட்டிச் செல்ல, நம்முடனும் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் திரு.அமோத். ஒரு கூகுள் தேடல் தனது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றியது என்பதையும், தன்னை அறியும் பாதைக்கு இட்டுச் சென்ற அனுபவத்தையும் அமோத் விவரிக்கிறார்.

திரு. அமோத் தத்தார்:

“சத்குருவ நீங்க ஏன் இந்தஅளவுக்கு நேசிக்கிறீங்க?” எனது 18 வயது மகள் கேலி செய்வது போல் கேட்டாள். ஆச்சரியப்படும் விதமாக என்னிடம் அதற்கான பதிலாக எந்த வார்த்தைகளும் வரவில்லை. எப்போதும் இல்லாதபடி நான் அமைதியாக திகைத்து நின்றேன். எனது நினைவுகள் மனதில் சுழலத் துவங்க, இது எப்போது துவங்கியது என நினைவு கூர்ந்தேன். மூன்று வருடங்கள் முன்பு, எனது நண்பர் ஒருவரைப்பற்றி கூகுளில் தேடினேன். அப்போது அவர் சத்குருவைப்பற்றி You என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளதை அறிந்துகொண்டேன். அதில் உள்ள சத்குருவைப் பற்றிய குறிப்புகள் சத்குருவை மேலும் அறிந்துகொள்ளத் தூண்டியது.

நடுத்தரவயது பிரச்சனையில்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சத்குரு வழங்கும் ஒரு எளிய தியானமான ‘ஈஷா கிரியா’ பயிற்சி பற்றி அறிந்துகொண்ட நான், அதனை முயன்று பார்க்க முடிவு செய்தேன். தினமும் ஈஷா கிரியா பயிற்சியை செய்யத் துவங்கியதும், விரைவிலேயே அது எனது தினசரி பயிற்சியாக மாறியதோடு, எனக்குள் ஒரு அமைதியை கொண்டுவந்தது.

அப்போது சில வருடங்களாக நான் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தேன். மேலும் பலவித உடல் உபாதைகளும் இருந்தன. அன்றாட செயல்பாடுகளுக்காக தினசரி வலிநிவாரணிகள் எடுத்துக்கொள்வது மிகவும் நரகமாக இருந்தது. அடிக்கடி நான் உடன் பணிபுரிபவர்களுடன் கடிந்துகொள்வது போன்ற செயலில் ஈடுபடுவதை நான் உணர்ந்தேன். பணியிடம் எனக்கு சுமூகமாக இல்லாமல் போனது! அவ்வப்போது மன அழுத்தம் மற்றும் பதற்றம் உண்டாவதை உணர்ந்தேன். இதெல்லாம் நடுத்தரவயதில் வரும் பிரச்சனைகள் என்று நான் அறிந்திருந்த போதிலும், நான் இதிலிருந்து எப்படியாயினும் வெளிவர வேண்டுமென விரும்பினேன். பின்னர் எனது அலுவலக நண்பரின் வழிகாட்டுதலின்படி உணர்வுகளை எப்படி கையாள்வது என்பதை படிக்கவும் சில மூச்சுப்பயிற்சிகள் செய்வதையும் ஆரம்பித்தேன். ஆனால் இதெல்லாம் ஒரு தற்காலிக தீர்வாகவே இருந்தன. நான் முழுவதுமாக அதிலிருந்து வெளிவர விரும்பினேன்.

சத்குரு வழங்கும் ஒரு எளிய தியானமான ‘ஈஷா கிரியா’ பயிற்சி பற்றி அறிந்துகொண்ட நான், அதனை முயன்று பார்க்க முடிவு செய்தேன். தினமும் ஈஷா கிரியா பயிற்சியை செய்யத் துவங்கியதும், விரைவிலேயே அது எனது தினசரி பயிற்சியாக மாறியதோடு, எனக்குள் ஒரு அமைதியை கொண்டுவந்தது. ஆறுமாத கால பயிற்சிக்கு பின்னர் நான் ஈஷா இன்னர் இஞ்சினியரிங் வகுப்பில் கலந்து கொண்டேன்.

2014 நவம்பர் சிட்னி நகருக்குச் சென்று ‘ஈஷா இன்னர் இஞ்சினியரிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த பயண அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. அந்த உள்நாட்டு பயணம் என் வாழ்வில் நான் எங்கே இருக்கிறேன் என்பதையும் ஏன் இந்த படியை எடுக்கிறேன் என்பதையும் பிரதிபலிப்பதற்கான தருணமாக அமைந்தது. எதை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நான் நகர்வதைப் புரிந்திருந்தேன். ஏதோ அசாதாரணமான ஒன்று எனக்கு நிகழவிருப்பதை நான் உணர்ந்தேன்.

சத்குரு வழங்கிய நிகழ்ச்சியின் அற்புதம்!

அந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ எனும் இன்னொரு கிரியா என் கையில் இருந்தது. எனது பரபரப்பான பயணஅட்டவணை ஒருபுறம் இருந்தாலும் தினமும் இரு முறை ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை தொடர்ந்தேன். என்னுடைய சுற்றுச்சூழலிலும் எனது நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் மெல்ல மெல்ல தொடர்ந்து நிகழ்வதை நான் கவனித்தேன். நான் அமைதியாக மாறிவிட்ட அதே சமயத்தில் கனிவாகவும் மாறினேன். என்னிடம் ஒருவித கட்டுக்கோப்பை உணர்ந்தேன். அதனால் என்னுடைய உள்நோக்கிய பயணம் இன்னும் ஆழமானது. என்னுடன் கை கோர்த்திருந்த மன அழுத்தமும் பதற்றமும் விலகிச் சென்றது. பதற்றமான சூழ்நிலையிலும் அமைதியாக செயல்பட்டு அதற்கான தீர்வை நான் காண்பதாக என்னுடைய சக பணியாளரும் தெரிவித்தார்.

என்னுடைய தேடல் அதிகரிக்க, 2015ல் மேலும் சில யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். ஈஷா ஹதயோகா நிகழ்ச்சியிலும் பாவஸ்பந்தனா மற்றும் சூன்யா போன்ற மேல்நிலை யோக வகுப்புகளிலும் கலந்துகொண்டேன். கோவைக்கு அருகிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு இருமுறை நேரில் சென்றேன். இருமுறையும் சத்குருவை தரிசிக்கும் வாய்ப்பும் அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது எனது பாக்கியம். நான் இதற்கு முன்னர் பங்கேற்ற தலைமைப்பண்பு நிகழ்ச்சிகள் அளித்திராத பண்புகள் சத்குரு மூலம் கிடைக்கப்பெற்றேன். நான் மேலும் விழிப்புணர்வு மிக்கவனாகவும் உயிரோட்டம் மிக்கவனாகவும் மாறினேன். என்னால் காரண அறிவு மற்றும் கருணைக்கும் இடையில் சமநிலையுடன் இருக்க முடிகிறது. அதோடு அது என்னை வெற்றிகரமான மெக்கானிக்கல் இஞ்சினியராக, ஒரு தலைவராக மற்றும் சிறந்த சக பணியாளராக உருவாக்கியது!

பிரிஸ்பேன் நகரில் புதிய துவக்கம்...!

ஈஷா தன்னார்வத் தொண்டராக மாறியது எனது வாழ்வின் இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது. ஈஷா யோகா பயிற்சியின் இனிமையை ருசித்த பின், எனது உள்நிலை தேடலை அதிகரிப்பதற்கு என்னை மற்றவர்களுக்காக வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்கும் என தீர்மானித்தேன். ஆனால், பிரிஸ்பேன் நகரில் பிற ஈஷா செயல்பாடுகள் இல்லாததால் அதற்கான வாய்ப்பு இல்லமால் இருந்தது. உள்நிலை மாற்றத்திற்கான சத்குருவின் வழிமுறைகளை இன்னும் நிறைய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு விரும்பியதால், நான் ஈஷாங்காவாக - ஈஷாவின் ஒரு அங்கமாக - மாறினேன். ஈஷா மையங்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் உதவியால், நாங்கள் மெதுவாக பிரிஸ்பேனில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 800 பேருக்கு மேல் நிகழ்ச்சிகளை கொண்டு சேர்த்துள்ளோம். இத்தகைய ஒரு மகத்தான பணியில் என் பங்களிப்பை வழங்குவேன் என்று நான் எப்போதும் நினைத்து பார்த்ததே இல்லை! எனது பங்களிப்பு எவ்வளவு சிறிதாக இருந்தாலும் நான் என்னை ஈஷாவின் சிறிய அங்கமாக உணர்கிறேன், எனவே சத்குருவின் அங்கமாகவும்!

என்னுடைய மகளின் கேள்விக்கு மீண்டும்...

நான் ஏன் அவரை இவ்வளவு நேசிக்கிறேன்? சத்குருவிற்கு எனது நன்றிகளை எப்படி சொல்லி வெளிப்படுத்துவது? என் உயிரை காத்து, எனக்கு அவர் வழங்கியவை அற்புதமானவை! நான் இதனை என் மகளிடம் விவரிக்க முயற்சித்தேன், ஆனால் ஏனோ வார்த்தைகளில்லை!.

அமோத் தத்தார் அவர்கள் ஆஸ்திரேலியாவின் முன்னணி உரத் தொழிற்சாலையான ‘நார்தன் ஆஸ்திரேலியன் ஆப்பரேஷன்ஸ்’ எனும் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

குறிப்பு: சத்குருவின் வாசகங்களை தினசரி உங்கள் அலை பேசியில் பெற, பதிவு செய்யுங்கள் அல்லது Mystic Quotes App என்னும் இலவச செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.