“நதிகளை மீட்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 1

செப்டம்பர் 3, 2017

ஜூலை 9 அன்று அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 மாதங்களாக நம் நாட்டின் பல ஊர்களிலும் மிகக் கடுமையான பிரச்சாரம் மற்றும் செயலுக்குப் பின், “நதிகளை மீட்போம்” பேரணிக்காக சத்குருவின் பயணம் இன்று கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகிறது!

நம் நதிகளை மீட்கவேண்டும் என்ற இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சத்குரு அறிவித்த நாளில் இருந்து, காட்டுத்தீ போல் பரவி இன்று இது மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசாங்கம், பாதுகாப்புப் படையினர், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் இதற்குத் தங்கள் ஆதரவை சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மட்டுமின்றி, பொது இடங்கள், தெருக்களிலும் கூட “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டைகளை ஏந்திநின்று இந்த இயக்கத்திற்கு மேன்மேலும் பல லட்சம் பேரின் ஆதரவைப் பெற பல்லாயிரக் கணக்கான மக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வாழும் அனைவருக்கும் இந்த இயக்கம் பற்றித் தெரியவேண்டும், இதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதரவை மிஸ்டு-கால் மூலம் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடக்கிறது இந்த வேள்வி.

சத்குரு மேற்கொள்ளும் இப்பயணத்தால், இந்த இயக்கம் இன்னும் பிரம்மாண்டமாய் வளர்ந்து, நம் நதிகள் ஜீவநதிகளாக என்றும் கரைதொட்டு ஓடவேண்டும். பாரதம் மஹாபாரதம்!

#RallyforRivers

  Contest Winners


  Here are the winners for the contest

  Weekly Winner
  (Sep 15th - 21st) Tapping Emotions into Colours Bal Barati Public school, Noida
  View All
  x
  முன்னெப்போதையும் விட, இப்போது நதிகளை காக்க நாம் செயல்புரிய வேண்டும். #RallyForRivers