இந்த 3 ஆண்டுகள் வருவதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டுமே?

கேள்வி: இதுவரை என் தந்தை என்ன சொல்லியும் கேட்காமல் இஞ்சினியரிங் படிப்பை பாதியிலே விட்டு, வேறொரு கோர்சும் வேண்டாம் என்றுவிட்டு, எனக்குப் பிடித்தமான இசையில் கவனம் செலுத்தி, டில்லியில் ஒரு சிறு இசைக் கலைஞனாக இப்போதுதான் தலை எடுத்திருக்கிறேன். ஆனால் “நதிகளை மீட்போம்” பேரணிக்கு கடந்த சில வாரங்களாக ஆதரவு திர்ட்டிவிட்டு, நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எனக்குள் திடீரென எதுவோ உடைந்தது. நேற்றிரவே 3-வருட தன்னார்வத் தொண்டு செய்ய பதிவு செய்து கொண்டேன். இதை என் தந்தையிடம் கூறியபோது, அவர் வெகுண்டார். உங்களை “ஆன்மீகத் தீவிரவாதி” என்றதோடு, உங்களிடம் இக்கேள்வியைக் கேட்குமாறு கூறினார், “ஒரு மகனாக நான் என் பெற்றொருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?” என்று. இதற்கு நீங்கள் பதில் கூறமுடியுமா? அதோடு, எனக்கும் ஒரு கேள்வி உள்ளது, “நான் செய்ய நினைப்பது சிறந்தது தானா?”

சத்குரு:

 • இங்கு சரி-தவறு என்று எதுவுமில்லை. உனக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய். அதில் உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அதில் முதலீடு செய், அதுவே மகத்தானதாக ஆகும்.
 • உனக்கும், உன் பெற்றோருக்குமான நீ செய்யவேண்டிய கடமை… உன் வாழ்க்கை என்பது மிகக் குறுகிய நிகழ்வு. விட்டில் பூச்சியின் வாழ்க்கை உன் அனுபவத்தில் மிகக் குறுகியதாக, அர்த்தமற்றதாக இருப்பின், நதிகளுடன் ஒப்பிடும் போது நீ விட்டில் பூச்சியை விடவும் மிக அர்த்தமற்ற நிகழ்வு.
 • உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் தந்தையின் வாழ்க்கையும் மிகமிகக் குறுகியது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்து.
 • முன்காலத்தில் இறக்கும் நேரத்தில் காசிக்கோ, வேறெங்கோ கூட்டிச் சென்று தனக்கு முக்தி கிடைக்க மகன் வழி செய்வான் (மகள் திருமணம் செய்து புக்ககம் சென்றுவிடுவாள்) என்றுதான் மகன் வேண்டும் என்று வேண்டினார்கள். அதுதான் மகனின் கடமையாக இருந்தது.
 • உன் தந்தை என்னை என்னவென்று சொன்னாலும் அது ஒன்றும் பிரச்சினையில்லை.
 • “இதில் பங்கெடுப்பதன் மூலம் நான் சரியானதைச் செய்கிறேனா?” அது எனக்குத் தெரியாது. ஆனால் இதுதான் இப்போது இங்கு நடக்கவேண்டிய மிகமிக முக்கியமான விஷயம்.
 • தனக்குத் தேவையானதை செய்பவன் புத்திசாலி. என்ன தேவையோ அதைச் செய்பவன் மேதை. எப்போது என்ன தேவை என்பதைப் பார்த்து அதைச் செய்யத் துவங்குகிறீர்களோ, உங்கள் மேதைமை மலரும்.
 • இப்பேரணியின் பல அம்சங்களை என் மனதில் உருவாக்கினாலும், சிலவற்றை மட்டுமே செய்யவேண்டிய குறிப்புகளாக வெளியில் கூறினேன். மற்றவை தானாய் நிகழ்ந்தது.
  இது என் மனசக்தியை உபயோகித்ததால் என்று எண்ண வேண்டாம்.
 • இவ்வுலகின் தேவை எதுவோ, அது என் விருப்பமாக, என் உறுதியாக இருப்பதால்!

#RallyforRivers

  Contest Winners


  Here are the winners for the contest

  Weekly Winner
  (Sep 15th - 21st) Tapping Emotions into Colours Bal Barati Public school, Noida
  அனைத்தையும் காண்க
  x