விதிமுறைகளும் நிபந்தனைகளும்

 • வீடியோ சமர்பிப்பதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் மிக முக்கியமானது. நீங்கள் சமர்பிக்கும் வீடியோ, தகுதியானதா, முக்கியமான சட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று சரிபார்க்கப்படும். போட்டி விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறினால், கடைபிடிக்காவிட்டால், உங்கள் படைப்பு நிராகரிக்கப்படும் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 • போட்டிக்குள் நுழையும் அத்தனை படைப்புகளும் போட்டியின் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.
 • The organizers reserve the right to change the terms and conditions as deemed necessary.
 • The organizers reserve the right to disqualify entries as deemed necessary.
 • The organizers reserve the right to evaluate and select winning entries based on the mentioned criteria. Any disputes regarding the evaluation and selection of winning entries will not be entertained.

வீடியோவில் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள்:

 • புதுமையாகவும், படைப்பாற்றல் மிக்கதாகவும் உங்கள் படைப்பு இருக்கட்டும். ஏற்கனவே, வீடியோவின் உள்ளடக்கம், வேறு விளம்பரத்திலோ, போட்டியிலோ பயன்படுத்தப்பட்டதாக இருந்தால் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காப்புரிமை, அறிவுசார் சொத்து சார்ந்த உரிமை மீறல்களுக்கு நீங்களே முற்றிலும் பொறுப்பாவீர்கள்
 • உங்கள் வீடியோவிற்கு ஒரு தனித்துவமான தலைப்பை வையுங்கள். உதாரணமாக, “Rally For Rivers” என்ற தலைப்பை வைக்க வேண்டாம்
 • வீடியோ நீளம் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 5 வினாடிகள் முன்பின் இருப்பது அனுமதிக்கப்படும்.

வீடியோவில் கண்டிப்பாக இருக்கக்கூடாதவை:

 • வீடியோவின் உள்ளடக்கத்தில் – தனியுரிமை கோரும் விஷயங்கள், விளம்பரங்கள் மற்றும் வேறு ஒருவர்/ நிறுவனத்தின் அறிவுசார் சொத்துக்கள் சார்ந்த உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது.
 • “நதிகளை மீட்போம்” இயக்கத்தின் லோகோவை தவிர, வேறெந்த நிறுவனத்தின் brandபெயர் அல்லது trademarksற்கு முக்கியத்துவம் தரக்கூடாது
 • பொருத்தமற்ற, அருவருப்பான, ஆபாசமான, வெறுக்கத்தக்க, அவதூறான, பழிசுமத்துகிற எந்த விஷயங்களும் வீடியோவில் இடம்பெறக்கூடாது.
 • வெறுப்பு, இனவெறி, யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் அல்லது இனம், பாலினம், மதம், தேசம், ஊனம், பாலியில் சார்பு அல்லது வயது இவற்றின் அடிப்படையில் பாகுபாடு உண்டாக்கும் விதத்தில் உங்கள படைப்பு இருக்கக்கூடாது.
 • வீடியோ சட்டவிரோதமாகவோ, வரம்பை மீறக்கூடியதாகவோ அல்லது இந்திய சட்ட திட்டத்திற்கு புறம்பானதாகவோ இருக்கக் கூடாது.

மற்ற நிபந்தனைகள்:

 • பயில்முறை (Amateur) நோக்கில் தயாரிக்கும் வீடியோக்களும் வரவேற்கப்படும். பங்கேற்பாளர்கள் அதை எந்தவிதமான கருவியை கொண்டும் ரெக்கார்ட் செய்யலாம்.
 • வீடியோ எந்த பாணியிலும் இருக்கலாம். (உதாரணத்திற்கு, பகிர்தல், நகைச்சுவை, நாடகம், ஆவணப்படம், அனிமேஷன், ஓவியப் படைப்பு சார்ந்த அல்லது உண்மைச் சம்பவங்கள் கொண்ட படமாக இருக்கலாம்)
 • வீடியோக்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
 • வீடியோ எந்த பார்மேட்டிலும் (format) இருக்கலாம்.
 • விளம்பர நோக்கம் இல்லாமல், வீடியோவில், தற்செயலாக பிறரது லோகோ, சின்னங்கள், நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் இடம்பெறலாம்.
 • ஒரே பங்கேற்பாளர், பல வீடியோக்களை போட்டிக்கு அனுப்பலாம். ஒரே வீடியோவின் பல்வேறு பதிப்புகளையும் அனுப்பலாம். எனினும், அந்த பங்கேற்பாளரின் ஒரு வீடியோ மட்டுமே இறுதிச்சுற்றுக்குள் நுழையும்.
 • வீடியோ சமர்பிக்கப்பட்ட பின், அதன் அசலையோ திருத்தப்பட்ட பதிவையோ, விளம்பரத்திற்காக எந்த ஊடகத்திலும் பிரசுரிக்கும் உரிமை ஒருங்கிணைப்பாளர்களுக்கு உண்டு.
 • உங்கள் வீடியோ பொருத்தமானதாய் இல்லாதபட்சத்தில், அது எப்போது வேண்டுமானாலும் இணையதளத்திலிருந்து நீக்கப்படலாம்.
 • வெற்றியாளர் என அறிவித்தபின்னும், இறுதிச்சுற்றில் இடம்பிடித்த பின்பும்கூட, அது இன்னொருவருடைய வீடியோ என்று நிரூபிக்கப்பட்டால், அந்த வீடியோ செல்லுபடி ஆகாது.
 • பதிவுசெய்யும்போது கொடுக்கும் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இவை யாவும் சரிபார்க்கப்பட்டு, சேமித்து வைத்து பகிரப்படும். அல்லது போட்டியில் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படும். இதற்கு பங்கேற்பாளர்கள் ஒப்புதல் அளிப்பதாய் கருதப்படுகிறது.