நதிகளை காத்திடுங்கள்

இது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும். - சத்குரு

நதிக்கரைகளில் ஒரு கி.மீ பரப்பளவில் கணிசமான அளவு மரங்களை வளர்ப்பது நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும், சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார பலன்களை மிக பெரிய அளவில் அளிக்கும்.

  • வளமான நதிநிலைகள், நமது நீர் மற்றும் உணவை இன்றும், என்றும் பாதுகாக்கும்.
  • தனிமனிதன் முதல் நாட்டின் தொழில்களுக்கும் வர்த்தகத்திற்கும், நிலையான நீர்நிலைகள் இன்றியமையாததாய் இருக்கின்றன.
  • பயிர்களில் இருந்து இயற்கை முறையிலான பழப்பயிர் விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.
  • இந்தியாவின் தொழிலாளர்களில் பெருன்பான்மையானவர்கள் விவசாயிகளே. மிக குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் அவர்களே. அவர்களின் வருமானத்தை உயர்த்துவது மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும்.
  • இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தை பல்வகையில் இது பலப்படுத்தும்.

இந்த வகையான பெரிய அளவிலான நீண்டகால செயல் திட்டம் அரசு கொள்கை மூலமே நிலைபெற முடியும். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள், “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” என்னும் மாபெரும் இயக்கத்தை துவக்கி இருக்கிறார். இந்த இயக்கம் மூலம் நதிகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குமரி முதல் இமயம் வரை அவரே வாகனம் ஓட்டி செல்வார்.

மரங்கள் எவ்வாறு நதிகளை பாதுகாக்கும்

இந்திய நதிகள் பெரும்பாலும் மழை பொழிவினாலேயே நீர் பெறுகின்றன. மழை இல்லாத காலங்களிலும் அவை ஓடிக்கொண்டிருப்பது எப்படி? வற்றாத ஜீவநதிகள் மழை இல்லா காலங்களிலும் ஓடி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மரங்கள்.

Source: wri.org

மரங்கள் எவ்வாறு நதிகளை பாதுகாக்கும் மரங்களின் வேர்கள் மண்ணை நுண்துகளாய் மாற்றி மழை நீரை உறிஞ்சி அதை இருத்திக்கொள்கிறது. மண்ணில் இருக்கும் இந்த நீர் படிப்படியாக ஆற்று நீரோடு கலந்து வருடம் முழுவதும் ஆறு ஓட வழிவகுக்கிறது

மரங்கள் இல்லையெனில் வெள்ளம், வறட்சி போன்ற பேராபத்துகள் சுழற்சியாய் நடந்து கொண்டே இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடும். மண் நீரை உறிஞ்சாததால். மழைக்காலம் முடிந்தபின் ஆறு வற்றி விடுகிறது. மண்ணில் ஈரப்பதம் இல்லாததே காரணம்

ஆற்றங்கரைகளில் மரம் வளர்ப்பதினால் ஏற்படும் பல நன்மைகளை அறிவியல் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன:

  • ஆறுகளை வற்றாத ஜீவநதிகளாய் மாறும்
  • வெள்ளப்பெருக்கை குறைக்கும்
  • வறட்சி நிலையை எதிர்க்கும்
  • நிலத்தடி நீரை மேம்படுத்தும்
  • மழை அளவை சீர்செய்யும்
  • பருவநிலை மாற்றங்களை எதிர்க்கும்
  • மண் அரிப்பை தடுக்கும்
  • தண்ணீர் தரத்தை உயர்த்தும்
  • மண்வளத்தை உயர்த்தும்
  • பல்லுயிர்களுக்கு புகலிடமாகும்
x