நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இன்னும் சொல்லப்போனால் நாம் ஒரு மாபெரும் இக்கட்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். இனியும் இதை நாம் புறக்கணிக்க முடியாது. இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தின் எல்லாப் பிரிவினருக்கும் ஏற்படுத்த, “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை ஈஷா அறக்கட்டளை ஒருங்கிணைத்து வருகிறது. இதற்காக 16 மாநிலங்களில், 7000 கி.மீ பயணத்தை மேற்கொண்டு, 23 இடங்களில் நிகழவிருக்கும் பிரச்சார நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்து கொள்கிறார். இப்பயணத்தில் அவருடன் பல பிரபலங்கள் ஆங்காங்கே கலந்து கொள்கின்றனர்.
நம் நதிகளைக் காக்க உதவுங்கள். 80009 80009 எனும் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள். மேலும் விபரங்களை RallyForRivers.org இணையதளத்தில் பெறலாம்.