தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகிறதா?

ஒரு மிஸ்டு கால் கொடுக்கும்போது, தாங்கள் மிஸ்டு கால் கொடுக்க பயன்படுத்திய தொலைபேசி எண்ணை மட்டுமே ஈஷா அறக்கட்டளை பதிவு செய்கிறது. வேறெந்த மிஸ்டு கால் போலவும்தான் இதுவும். ஒரு மிஸ்டு கால் கொடுக்கும்போது (உங்கள் தொலைபேசி எண் தவிர) உங்கள் லொக்கேஷன் அல்லது பிற விபரங்கள் சேகரிக்கப்பட மாட்டாது.

உங்கள் தொலைபேசி எண்ணை ஈஷா அறக்கட்டளை எவ்வாறு பயன்படுத்தும்?

ஒரு மிஸ்டு கால் கொடுக்கும்போது, நதிகளை மீட்கும் “Rally for Rivers” இயத்திற்கான உங்கள் ஆதரவு பதிவு செய்யப்படும். தேசத்து பிரஜைகளின் இந்த ஆதரவு, விரிவான நதிகள் மீட்பு செயல்திட்டம் உருவாக்குவதற்கான ஒரு படியாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்.

ஒருமுறை மிஸ்டு கால் கொடுத்துவிட்டால், எதிர்காலத்தில் இந்த செயல்திட்டம் குறித்த செய்திகள் sms அல்லது whatsapp மூலமாக உங்களை வந்தடையலாம். இந்த வழிப்பணர்வு பிரச்சாரத்தின் போதும் சில sms உங்களுக்கு அனுப்பப்படலாம்.

  • இதனுடன் தொடர்பில்லாத பிற விஷயங்களை அல்லது பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய இது பயன்படுத்தப்பட மாட்டாது.
  • இணையம் மூலமாக உங்களிடம் விளம்பரங்கள் செய்யவும் பயன்படுத்தப்பட மாட்டாது.
  • வேறெந்த தனிநபர் / அமைப்பு / நிறுவனத்துடனும் இது பகிரப்பட மாட்டாது.

80009 80009 எனும் எண், பிற பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கும் மற்றவைக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

இல்லை. கடந்தகாலத்தில் 80009 80009 என்ற எண்ணை பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களில் பயன்படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு கீழ்க்காணும் வெவ்வேறு பிரச்சாரங்களில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது:
குட்கா முக்தி அபியான்
ஹார்லிக்ஸ் நடத்திய #Immunity4Growth பிரச்சாரம்

நதிகளை மீட்போம் இயக்கம், மேற்கூறப்பட்டுள்ள எந்த திட்டத்துடனும் தொடர்பில்லாதது. 80009 80009 என்ற எண், காஸ்மிக் இன்ஃபோடெக் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த எண்ணை நதிகளை மீட்போம் இயக்கத்தற்காக ஈஷா அறக்கட்டளை லீஸ் எடுத்துள்ளது.