ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்
இந்திய நதிகள் மீது தங்களுக்கு அக்கறை இருந்தால், அவற்றை மீட்டெடுப்பதற்கு மிக எளிமையான ஒரு வழி, மிஸ்டு கால் கொடுப்பதுதான். நீங்கள் அறிந்தவர்கள், உங்கள் சுற்றத்தார் என அனைவரையும் 80009 80009 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள்.
மிஸ்டு கால் என்ன செய்யும்?

ஜனநாயக முறையில் செயல்படும் ஒரு நாட்டில், பெருவாரியான மக்களின் குரல் ஒரு விஷயத்திற்காக ஓங்கி ஒலிக்கும்போது, அரசு அதுகுறித்து சிந்தனை செய்யும். மக்களிடமிருந்து போதுமான ஆதரவும், உந்துதலும் இல்லாவிட்டால், ஒரு சாதகமான, “நதி மீட்பு கொள்கையை” இயற்றுவது சுலபமல்ல.
நம் தேசத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. பொது மக்களின் ஆதரவினை அளக்க, மிகச் சுலபமான ஒரு வழி – மிஸ்டு கால். சுலபமாய் சொல்வதென்றால், நம் நதிகளை காக்க, உங்களது ஒவ்வொரு மிஸ்டு காலும் ஒரு ஓட்டாக பதிவாகும்.