சமீபத்திய பேரழிவுகள்
ஒரு காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இப்பொழுது, அங்கு ஒவ்வொரு வருடம் நடக்கும் சித்திரைத் திருவிழாவிற்குகூட நீர் இல்லாமல் வற்றிப் போய்விடுகிறது. “திருவிழாவை விடுங்கள், வைகை அணைக்கட்டில் தேங்கி இருக்கும் எல்லா நீரையும் வெளியேற்றினால்கூட, குடிநீர் பற்றாக்குறையைக்கூட நம்மால் தீர்க்க முடியவில்லை,” என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.
மற்ற இந்திய ஆறுகளைப் போல, சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீரும், தொழிலக கழிவுகளும் வைகை ஆற்றினுள் விட்டதால், வைகையின் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காப்பட்டுள்ளது.
ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வைகை ஆற்றங்கரையிலே அமைந்துள்ளது. வைகை ஆறும் மீனாட்சி அம்மனும் தொடர்புப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கதைகள் ஏராளம்.
வைகையிலிருந்து வருடா வருடம் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் விட்டு, சித்திரைத் திருவிழாவில் தெப்பம் விட்டு, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
‘வை’ என்றால் தொடு, ‘கை’ என்றால் கரங்கள் – அதாவது கையால் தொட்டாலே தண்ணீர் வரும் என்று சங்கத்தமிழ் இலக்கியங்களில் வைகை ஆற்றைப் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
பாண்டியர் காலத்தில் மதுரையை தலைநகரமாக கொண்டு, அங்கிருந்து மற்றொரு கரையிலிருந்த அழகர்குளம் என்ற இடத்திற்கு வாணிபத்திற்காக வைகை ஆற்றை நீர்வழியாக பயன்படுத்தினார்கள்.