சபர்மதி

ஆற்றின் நீளம்

371 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

21,674 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

1,33,00,000 (2001)

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

ராஜஸ்தான், குஜராத்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

அகமதாபாத் (56 லட்சம் மக்கள் தொகை), காந்திநகர் (2,08,000 மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: அதிகம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • சபர்மதி ஆற்றைச் சுற்றி சுமார் 16,000 ச.கிமீ பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் அந்நதியின் நீர் பாசனத்தை சார்ந்தே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1800 மில்லியன் க்யூபிக் மீட்டர் நீரை இந்த ஆறு விவசாயத்திற்கு மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
  • அஹமதாபாத்தின் ஒருநாள் குடிநீர் தேவையான சுமார் 70 மில்லியன் லிட்டர் நீரை இந்த ஆறு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய பேரழிவுகள்

நீர் உபயோகத்தில் சபர்மதி ஆறு மிகவும் அதிகமாக சுரண்டப்பட்ட ஒன்று. உலகிலேயே மிக அதிகமாக நீர்நிலை பயன்பாட்டு அழுத்தத்திற்கு உள்ளான 10 ஆறுகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

அடிப்படையில் இது அஹமதாபாதின் வறண்ட ஒரு கிளைநதியாகும். நர்மதை நதியின் நீர்தான் ஒரு வாய்க்கால் வழியாக சபர்மதிக்குள் கொண்டு சேர்க்கப்படுகிறது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

இந்த நதிக்கரையில்தான் மஹாத்மாகாந்தி சபர்மதி ஆசிரமத்தை நிர்மாணித்தார். புனிதநூல்களின்படி இந்த நதி சப்தரிஷிகளில் ஒருவரான ரிஷி கஷ்யப்பருடன் தொடர்புடையது என்பதால் இதற்கு கஷ்யபி கங்கை எனற பெயரும் உண்டு. யோகியான கஷ்யப் சிவனிடம் கங்கையின் போக்கை அவரது ஜடாமுடியிலிருந்து இந்த தேசத்திற்கு திருப்பிவிடச் சொல்லி வேண்டினார். சிவனும் அதற்கு இசைந்ததால், சபர்மதி பிறந்தாள்.

ஞானி ததீசியின் ஆசிரமம் சபர்மதியின் கரையிலுள்ள தூதேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. புராணக் கதைகளின்படி ததீச்சியின் எலும்புகளால்தான் இந்திரனின் வஜ்ராயுதம் செய்யப்பட்டது. இதனைக் கொண்டு விருத்தாசுரன் என்ற அசுரனை, இந்திரன் வதம் செய்தான். எனவே, ஞானி ததீச்சியின் ஆசிரமமும் தூதேஷ்வர் என்ற நகரமும் தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x