நொய்யல்


ஆற்றின் நீளம்

180 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

3510 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

20.1 லட்சம்

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

தமிழ்நாடு

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

கோயம்புத்தூர் (10.1 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: அதிகம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: குறைவு (அ) ஓரளவு

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • நொய்யல் நதி என்பது காவிரி நதியின் கிளை நதி. இது வெள்ளியங்கிரி மலைகளில் உருவாகி, கோயம்புத்தூர், திருப்பூர் வழியாக காவிரி நதியில் கலக்கிறது. இது காவிரியுடன் சேரும் இடம், கரூரிலுள்ள நொய்யல் பகுதி.
  • ஒரு காலத்தில் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களின் தண்ணீர் தேவையை நொய்யல் நதியும், இப்பகுதியில் இருந்த கால்வாய், குளம் மற்றும் சிற்றோடைகளே பூர்த்தி செய்தன. இது ஒரு சிறந்த தண்ணீர் தேக்கம் மற்றும் வினியோக அமைப்பாக செயல்பட்டு, நிலத்தடி நீரளவு குறையாமல் பாதுகாத்தது. இப்பகுதியில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
  • நகரமயமாக்குதல் காரணமாக, சரியான பராமரிப்பின்றி பல குளங்கள் காணாமல் போய்விட்டன. இப்போது வெறும் 11 குளங்களே உள்ளன. அவற்றிலும் பல பயன்பாட்டிற்கு உகந்த வகையில் இல்லை.
  • முன்பொரு காலத்தில் திறம்பட இயங்கி வந்த தண்ணீர் வினியோக அமைப்பு இப்போது செயல்படும் நிலையில் இல்லை. அதுமட்டுமல்ல இங்கு தண்ணீர் தட்டுப்பாடு வேறு தலைதூக்குகிறது. இதனால் விவ்சாயம் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. முன்பொரு காலத்தில் 3.5 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது, ஆனால் இன்று தண்ணீட் தட்டுப்பாட்டால் லட்சக் கணக்கான தென்னை மரங்கள் காய்ந்துபோய் வெட்டப்பட்டுள்ளன

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

தமிழ் இன வரலாற்றில் நொய்யல் நதி மிகப் புனிதமாக வணங்கப்படுகிறது. முன்காலத்தில் இது “காஞ்சி நாடி” என்று வழங்கப்பட்டது. பின்னரே இது “நோயற்ற” என்று பொருள்படும் நொய்யல் ஆனது.

கோவையின் வெகு அருகில் இருக்கும் பேரூரிலே, இந்த ஆற்றங்கரை ஓரமாக பல கோவில்களும், கலைக்கூடங்களும் உருவாக்கப்பட்டது. பேரூரில் இன்றும் இருக்கும் பட்டீஸ்வரர் கோவிலில், நாட்டியாஞ்சலி எனும் வருடாந்திர நாட்டியத் திருவிழா நடைபெறுகிறது.

நொய்யல் நதியின் பிறப்பிடமான வெள்ளியங்கிரி மலையை, தக்ஷிண கைலாயம் (அ) தென்கைலாயம் என்று சொல்வர். யோக மரபின் படி, ஆதியோகியாம் சிவன் இம்மலைகளில் சிறிதுகாலம் வசித்ததாக

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x