ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
பழங்காலத்தில் இந்நதி முச்சுகுண்டா என்று வழங்கப்பட்டது. மஹாபாரத காலத்திற்கு தொடர்புடைய அனந்தகிரி மலையை பிறப்பிடமாக கொண்டுள்ளது.
கிருஷ்ணா நதியை இது வடபள்ளி எனும் இடத்தில் சந்திக்கிறது. 12ஆம் நூற்றாண்டில் காகத்திய அரசர்களால் கட்டப்பட்டுள்ள மீனாட்சி அகஸ்தீஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் இங்கு அமையப் பெற்றுள்ளது.
மேலும், வடபள்ளியில் வியாச மகரிஷி தியானம் செய்ததாக சொல்லப்படும் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி கோயிலொன்றும் அமைந்துள்ளது.