மஹாநதி

ஆற்றின் நீளம்

858 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

141,600 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

2,83,00,000 (2001)

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

சத்தீஸ்கர், ஒடிசா

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

கட்டாக் (6,06,007 மக்கள் தொகை), சம்பல்பூர் (3,35,761 மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 9%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவிலிருந்து நடுத்தரம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • மகாநதியை சுற்றியுள்ள பள்ளத்தாக்கு, வளமுள்ள மண்ணுக்கும், செழிப்பாக வளரும் பயிர்களுக்கும் பெயர் பெற்றது. இந்தியாவிலேயே மிக நீளமான அணைக்கட்டான ஹிராகுட் அணை இங்குதான் கட்டப்பட்டுள்ளது. ஹிராகுட் அணைக்கட்டு, ஒடிஷாவில், பருவ காலங்களில் சுமார் 150,000 ஹெக்டேர் நிலப்பரப்புக்கும், மற்ற காலங்களில் 100,000
    ஹெக்டேர் நிலப்பரப்புக்கும் நீர்ப்பாசனம் செய்கிறது. மேலும், இது 260 மெ.வாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

இந்த நதிக்கரையில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சிர்பூரில், இந்த நதிக்கரையில் அமைந்துள்ள லட்சுமணன் கோவில், சுமார் 1500 வருடங்கள் மேல் பழமையானது. செங்கற்களினால் கட்டப்பட்ட இந்த கோயில் இன்றும் இந்தியாவிலேயே மிக நேர்த்தியான ஒன்றாக திகழ்கிறது.

ஹுமாவில், சாய்ந்த விதமாக கட்டப்பட்டுள்ள சிவன் கோவில் கோபுரம், உலகிலேயே அவ்விதத்தில் கட்டப்பட்ட வெகு சில கோவில்களில் ஒன்று. மகாநதி கரைகளில் பாறைகளினால் ஆன தொட்டில் போன்ற ஒரு இடத்தில் இது அமைந்துள்ளது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x