சமீபத்திய பேரழிவுகள்
கேரளாவின் வயநாடு பகுதியை மூலமாக கொண்ட கபினி, காவிரியின் முக்கிய கிளைநதியாகும். பருவ மழைக்குப் பிறகு வறண்டு விட்டதால் கபினி 2016 மற்றும் 2017ல் வறட்சியை சந்தித்தது. இதனால், இந்த நதிக்கரையில் வசிப்பவர்கள் தங்கள் நீராதாரத்திற்காக தண்ணீர் தொட்டிகளை நாடும் துர்பாக்கிய நிலையை அடைந்துள்ளனர். நதிக்கரைகளில் காடுகள் அழிக்கப்பட்டதே இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்படி மரங்களை அழிப்பது, கனமழையின்போது வெள்ளநிலையை ஏற்படுத்த வல்லதாகும்.
ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
கபில மகரிஷியின் பெயரால் ‘கபிலா’ என்ற பெயரிலும் கபினி அழைக்கப்படுகிறது. நஞ்சன்குண்டில் உள்ள பிரசித்திபெற்ற கண்டேஷ்வரா கோயில் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நஞ்சன்குண்ட் ஒரு சிலரால் ‘தட்சின காசி’ என்றும் அழைக்கப்படுகிறது.