கோம்டி

ஆற்றின் நீளம்

940 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

30,437 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

4 கோடி

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

உத்திரபிரதேசம்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

லக்னோ (28 லட்சம் மக்கள் தொகை), ஜான்பூர் (1,68,000 லட்சம் மக்கள் தொகை), சுல்தான்பூர் (1,08,000 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 32%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவு
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: மிக அதிகம்
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • கோம்டி நதி கங்கையின் மிக முக்கியமான கிளை நதியாகும். இதன் வடிநிலத்தில் சுமார் 20 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.
  • உத்திரபிரதேச காடுகளின் சராசரி அளவான 9.01%த்தில் கோம்டி வடிநிலப் பகுதியை ஒப்பிட்டால் 4.10% மட்டுமே காடுகள் சூழ்ந்துள்ளன. இன்னும் மூன்று மடங்கிற்காவது இங்கு மரங்கள் நடப்பட வேண்டும் என அறிக்கைகள் சொல்கின்றன. எனவே இந்த நதிக்கரைகளில் மரம் நடுதல் என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

கோம்டி மற்றும் அதன் கிளைநதிகள் இராமாயணம் மற்றும் மஹாபாரதத்துடன் மிக நெருங்கிய தொடர்புடவையாகும். சாது வசிஷ்டரின் மகளாக கருதப்படும் கோம்டியின் நதிக்கரையில், மஹாபாரதம் முதன்முதலில் சொல்லப்பட்ட வனமான நைமிஷா காடு இருந்துள்ளது.
.
ஏக்கோதர்நாத் மஹாதேவ் மற்றும் சுனாசிர்நாத் மஹாதேவ் ஆகிய இரு பழம்பெரும் சிவன் கோயில்கள் இந்நதிக்கரையில் அமைந்துள்ளன. இங்கு நிறைய லிங்கங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஒரு புனித குளத்தில் 8 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த லிங்கங்கள் ஒவ்வொரு சிவராத்திரியின்போதும் பூஜிக்கப்படுகிறது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x