கோதாவரி


ஆற்றின் நீளம்

1465 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

312,812 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

14.2 கோடி

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

ஹைதராபாத் (68 லட்சம் மக்கள் தொகை),
நாசிக் (15 லட்சம் மக்கள் தொகை),
அவுரங்காபாத் (12 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 20%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: நடுத்தரம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு: 88%
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • இந்திய தீபகற்பத்தில் உள்ள மிகப்பெரிய நதியான கோதாவரி அப்பகுதியில் உள்ள வேளாண்மைக்கு மிக மிக அவசியமானது.
  • கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகள் இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டும் சேர்ந்து 12,000 கி.மீ பரப்பளவில் வாழும், சுமார் 1 கோடி மக்களின் வாழ்விற்கு ஆதாரமாய் விளங்குகின்றன.
  • உள்நாட்டு நீர்வழிகளில் கோதாவரி முக்கியமானதாகும். இது தேசிய நீர்வழியாக அறியப்படுகிறது.


சமீபத்திய பேரழிவுகள்

2016-ஆம் ஆண்டில் கோதாவரியில் ஒருமுறை அல்ல இருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது – ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில். நதி ஓடிய மூன்று மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆந்திராவில் மட்டும் 5,43,000 மக்கள் வெள்ளத்தினால் வீடுகளை இழந்தனர். இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் என்ன நடந்தது என்று காண்போம்: கோதாவரி தனது மூலமான நாசிக்கில் வறண்டு காணப்பட்டது. நாசிக்கில் நடைபெற்ற கும்பமேளாவின் போது பக்தர்கள் மூழ்குவதற்காக நிலத்தடி நீர் மேலேற்றப்பட்டு நதியில் செலுத்தப்பட்டது.

அப்படியே பின்னோக்கி 2017 வெயிற்காலத்திற்கு வாருங்கள். கிருஷ்ணா, நர்மதா இரண்டும் குறைந்த அளவே நீர் கொண்டுள்ளதால் ஆந்திரா, தெலுங்கானா இரண்டும் வறட்சி சூழ்நிலையிலேயே இருக்கின்றன. இவ்வாறான வெள்ளம் மற்றும் வறட்சி என்று மாறி மாறி வரும் நிலை இந்தியாவின் எல்லா முக்கிய நதிகளிலும் நிகழ்கிறது.

 

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

கோதாவரி உருவாகும் தலமான த்ரியம்பகேஸ்வர் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்களில் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, கொண்டாடப்படும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.

பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங், கோதாவரி கரையில் அமைந்த நான்டெட் என்ற இடத்திலேயே குரு கிரந்தசாஹிப் அவர்களை சீக்கியர்களின் நிரந்தர குருவாக அறிவித்தார். கோதாவரி கரையில் அமைந்த பஸாரில், பிரபல சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. கலைகளின் தேவிக்காக அமைக்கப்பட்ட இந்த கோவில், பழங்காலத்தில் கோதாவரி கரையில் கலைகள் தழைத்தோங்கியதை குறிக்கிறது. பஸார், தர்மபுரி, காலேஸ்வரம், பத்ராசலம், ட்ரக்ஷரமம் என பல தலங்கள் கலைகளை சொல்லிக் கொடுப்பதில் தலைசிறந்து விளங்கின.

தீபகற்பத்தின் பெருமை வாய்ந்த பல அரசகுலங்கள் கோதாவரி கரையில் உருவாயின. 2000 வருடங்களுக்கு முன்னர் சடவாஹனர்களின் நான்கு தலைநகரங்கள் மூன்று கோதாவரி கரையில் அமைந்திருந்தன. காகத்தியர்கள் மற்றும் வெங்கி சாளுக்கியர்கள் கோதாவரி கரையில் உருவான பிற முக்கியத்துவம் வாய்ந்த அரசகுலங்கள்.

துறவிக் கவிஞர் தியானேஸ்வர் தியானேஸ்வரியை இந்நதிக்கரையில்தான் இயற்றினார்.

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x