காவிரி


ஆற்றின் நீளம்

802 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

88,000 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

7.3 கோடி

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

கர்நாடகா, தமிழ்நாடு

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

சென்னை (70 லட்சம் மக்கள் தொகை), பெங்களூரு (84 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 39%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவு: நடுத்தரம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு:: 87%
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: நடுத்தரம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • காவிரி என்னும் பெயரே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். “கா,” “விரி” என்றால், “தான் ஓடும் இடங்களில் எல்லாம் பெரும் வளம் கொழிப்பவள்,” என்று அர்த்தம்.
  • காவிரி டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அறியப்படுகிறது. மாநிலத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு விளைவிக்கப்படுகிறது. இந்த டெல்டா பகுதி சுமார் 44 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது.
  • தமிழ்நாட்டிலுள்ள 39% பாசனநிலங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள 11% பாசனநிலங்களுக்கும் காவிரி தண்ணீர் கொடுக்கிறது.
  • ஆசியாவின் முதல் நீர்மின் அணை சிவசமுத்திராவில் காவிரியின் குறுக்கே அமைக்கப்பட்டது. பெங்களூரூ நகரின் மின்தேவைகளை இந்த அணை பூர்த்தி செய்கிறது.

சமீபத்திய பேரழிவுகள்

2016ம் ஆண்டு, மழை 40 முதல் 70 சதம் வரை மழை பொய்ததால், காவிரி தன் மூலத்திலேயே வறண்டு போனது. இதற்கு நேர்மாறாக, 2015ஆம் ஆண்டில், தமிழகம் மிக மோசமான வெள்ளத்தை கண்டது. 500 பேர் தங்கள் உயிரை இழந்தனர். வெள்ளச்சேதம் சுமார் 20,000 – 160,000 கோடி ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஒரு இடைவெளியில், 2017ம் ஆண்டில், 140 வருடங்களில் இல்லாத வறட்சியை தமிழகம் இவ்வாண்டு சந்தித்தது. கர்நாடகம், 36% சதவிகித உணவுப் பொருள் உற்பத்தி குறைபாட்டினை கண்டது.

இவ்வாறான வெள்ளம், வறட்சி என்று மாறி மாறி வரும் நிலை இந்தியாவின் எல்லா முக்கிய நதிகளிலும் நிகழ்கிறது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

காவிரியின் உருவாக்கம் அகத்திய முனிவரோடு நெருக்கமான தொடர்புடையது. தென்னிந்தியாவின் ஆன்மீக செயல்முறைகளுக்கு அடித்தளமாய் பல வழிகளில் திகழ்ந்தவர் அகத்திய முனி.

தென்னிந்தியாவின் பல புண்ணிய தலங்கள் காவிரி கரையில் அமைந்துள்ளன. பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்குள்ள லிங்கத்தின் ஒரு பகுதி காவிரி நீரில் மூழ்கிய நிலையில் அமையப்பெற்றுள்ளது.

காவிரி ஒரு பெண் தெய்வமாகவே அறியப்படுகிறாள். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி கொடகு இன மக்களுக்கு காவிரியே குலதெய்வம்.

உலகின் மிகப் பழமையான அணை கல்லணை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரியின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்டது.

பண்டைய காலத்தில் பூம்புகார் ஒரு முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. காவிரி கடலில் கலக்கும் இடத்தில் பூம்புகார் அமைந்து இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் என்று அறியப்பட்ட இந்த நகருக்கு ரோம், கிரேக்கம், சீனம் மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்த வணிகர்கள் கடல் வழியாக வந்திருந்ததை அறிகிறோம்.

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x