பிரம்மபுத்திரா

ஆற்றின் நீளம்

3848 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

1,94,000 சதுர கி.மீ (இந்தியாவில்)

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

17.7 கோடி (இந்தியாவில், 2001)

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

அருணாச்சல பிரதேசம், அசாம், நாகலாண்ட், மேகாலயா, சிக்கிம் & மேற்கு வங்கம்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

கௌஹாட்டி (9,57,352 மக்கள் தொகை), சிலிகுரி (7,05,600 மக்கள் தொகை), டிப்ருகர் (1,54,019 மக்கள் தொகை), ஷில்லாங் (1,43,229 மக்கள் தொகை), தேஜ்பூர் (1,02,505 மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவிலிருந்து நடுத்தரம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: மிக அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு: 78%
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • பிரம்மபுத்திராவின் வடிநிலத்தில் அமைந்துள்ள ஒரு நீர்-மின்நிலையத்தின் உற்பத்தி அளவு 2120 மெ.வாட், மற்றும் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையத்தின் அளவு 3000 மெ.வாட்.
  • பிரம்மபுத்திரவையும் அதன் கிளைநதிகளையும் சுற்றியுள்ள காடுகள், உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காக்கும் உலகின் மிக முக்கியமான இடமாக இருக்கிறது. இங்குள்ள காஜிரங்கா தேசிய பூங்கா அழிந்துவரும், ஒருசில கடைசி காண்டா மிருகங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சொத்தாக பராமரிக்கப்படுகிறது.
  • பிரம்மபுத்திராவின் ஒரு கிளைநதியான மானஸ் நதிக்கரையில் உள்ள தேசிய பூங்கா மற்றுமொரு உலக பாரம்பரிய சொத்தாக பராமரிக்கப்படுகிறது. இந்த பூங்கா‘ ஹூல்லாக்கூபான்’ என்ற இந்தியாவின் ஒரே ஒருவிதமான மனிதக்குரங்கின் இருப்பிடமாக இருக்கிறது. புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை போன்ற பெரிய பூனை இனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.

சமீபத்திய பேரழிவுகள்

பிரம்மபுத்திராவின் கரைகளிலுள்ள வனங்களை அழித்ததால் வண்டல்கள் தேங்குவதின் அளவு அதிகரித்திருக்கிறது. திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. மேல்பரப்பில் உள்ள சத்துக்கள் எல்லாம் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இப்பெரும் வெள்ளங்களினால் பயிர்கள், உயிரினங்கள் மற்றும் பல வாழ்வாதாரங்களும் அதிக அளவில் சேதமாகியுள்ளது.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

பிரம்மபுத்திராவின் கரைகளில் பல தொன்மை வாய்ந்த கோவில்களும், புனிதமான இடங்களும் அமைந்துள்ளன. சக்திபீடங்களில் ஒன்றான காமாக்யா கோவில் இதன் கரையில்தான் அமைந்துள்ளது.

குரு தேக்பஹதூர் ஸாஹிப் குருத்வாரா என்று கூறப்படும் சீக்கியர்களின் கோயில், அஸ்ஸாமில் உள்ள துப்ரி ஆற்றின் கரைகளிலே அமைந்துள்ளது. 1505களில் குருநானக் இந்த இடத்திற்கு வருகை தந்தார். இந்த குருத்வாரா அவர் வந்துசென்ற 160 ஆண்டுகளுக்குப் பிறகு குருதேக் பஹதூரால் கட்டப்பட்ட்து. மற்றபல இந்திய ஆறுகள் பெண் அம்சமாக போற்றப்பட்டாலும், பிரம்மபுத்திரா மட்டும் ஆண்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x