தட்பவெப்ப மாற்றம் சீராக்குதல் மற்றும் சீரான மழையளவிற்கு மரங்கள் எப்படி உதவும்

இன்றைய தட்ப வெப்பநிலை மாற்றத்திற்கு மரங்கள் அழிப்பும் நிலங்களை பயன்படுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணிகளாக உள்ளன. இது, மனித இனத்தின் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில், கால் பங்கு வகிக்கிறது.

மரங்கள் தங்களது வளர்ச்சிக்காக காற்றிலிருந்து கார்பனை கிரகிக்கிறது. சூரிய சக்தியின் மூலம், மரங்கள் கார்பனை கார்பன் டை ஆக்ஸைடாக தங்கள் செல்களிலும் இலைகளிலும் கிளைகளிலும் மாற்றமடையச்செய்கின்றன. மரங்கள் நடுவதற்கு இதுவே மிக முக்கிய காரணமாகிறது. ஒரு மரம் கார்பனை மறுசுழற்சி செய்வதில் மிக முக்கிய பங்குவகிக்கிறது. மரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்த கார்பன்கள் கார்பன் டை ஆக்ஸைடாக சுற்றுச்சூழலிலேயே இருக்கும். நாம் மரங்கள் நடும்போது, சில கார்பன்கள் மரங்களில் தங்கி இருக்கும் மற்றவை மண்ணில் இலைகளாகவும் கிளைகளாகவும் விழுந்து மட்கி உரமாகும். இந்த உரமானது மண்ணில் கரிம வளத்தை அதிகரிக்க உதவுகிறது.

தற்போது, மனித இனம் வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடில் ஒரு கால் பங்கினை மரங்களும் செடி-கொடிகளும் உட்கொள்கின்றன. ஏற்கனவே புவி வெப்பமாதல் துவங்கிவிட்ட நிலையில், நாம் அதிகப்படியான மரங்களை விரைவில் நடவில்லையென்றால், மனிதனால் உமிழப்பட்டும் கார்பன் டை ஆக்ஸைடு புவியின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும்.

காடுகள், உலகை குளுமையாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக வெப்ப மண்டலங்களில், மரங்கள் இவ்வாறு பயனளிக்கிறது; உயர் மட்ட நிலப்பகுதிகளிலோ வெப்பத்தை அதிகரிக்கின்றன. ஆனால், அனைத்து நிலப்பகுதிகளிலும், மரங்கள் கார்பன் குறைப்பானாக இயங்க வல்லவை.

உலகளாவிய வெப்பத்திற்கு எதிராக மட்டுமல்லாது உட்பிரதேச அளவிலும் தாவரங்கள் செயல்புரிகின்றன. அதிகப்படியான கட்டிடங்கள், சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல், நீராவியாதலின் குறைபாடு போன்ற காரணங்களால் கிராமப்புற சுற்றுச்சூழலை விட நகர்ப்புற பகுதிகளில் 12°C அளவிற்கு கூடுதலான வெப்பம் நிலவுகிறது. இதனால் நகரங்கள், “நகர்ப்புற வெப்ப தீவு” (urban heat island) என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த தன்மையானது சுற்றுச்சூழலில் வெப்பநிலையை மட்டும் கூட்டுவதோடு, புயல்மழையின் தீவிரத்தையும் அளவினையும் அதிகரித்து, நகர்ப்புறங்களில் வெள்ள அபாயத்திற்கும் காரணமாகிறது.

முக்கிய நகரங்களில் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காங்கள் மற்றும் சாலையோர மரங்கள் நகர்ப்புறங்களில் கடந்த சில ஆண்டுகளில் இருந்த வெப்பநிலையை குறைக்கும் என அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

அடுக்குமாடி கட்டிட பகுதிகளில் 10% அளவிற்கு பசுமை பகுதியை அதிகரிக்கும்போது சுமார் 4°C அளவிற்கு நகர்ப்புற வெப்பநிலை குறையும் என மான்செஸ்டர் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வில் கணக்கிட்டுள்ளது!

இந்த 4°C அளவு வெப்பநிலையானது 2080ல் சராசரியாக அதிகரித்திருக்கும் வெப்பநிலைக்கு சமமானது. இவ்வாறு குளுமையாக்குதல், மரங்களின் நீராவியாதல் செயல்பாட்டால், நிகழ்கிறது.

மேலும், ஷெஃபெல்டு பல்கலைக்கழகத்தின் (University of Sheffield) ஒரு ஆய்வில் ஆறுகள் ஓடும் பகுதிகளில் உள்ள நகர்ப்புற சூழல் குளுமையாகிறது என்பதை கண்டறிந்துள்ளது. கட்டிட வடிவமைப்பு இஞ்சினியரிங் துறையில் ஒப்பீட்டு தொழிற்நுட்பம் மற்றும் வடிவமைப்பு துறையின் விரிவுரையாளரான டாக்டர். அபிகெய்ல் ஹேத்வே என்ற பெண்மணி, ஷெஃபெல்டு பல்கலைக்கழகத்தின் அருகில் ஓடும் டான் ஆற்றுப்படுகைகளில் மைக்ரேகிளைமேட் எனப்படும் நுண் சீதோஷ்ண தன்மை குறித்து ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் கோட்பாடுகளைக் கொண்டு நகர்ப்புற வடிவமைப்பை எப்படி அமைப்பது என்று அவர் ஆராய்கிறார்.

அவர் கூறும்போது: “நாங்கள் ஷெஃபெல்டு பகுதிகளின் ஆற்றுப்படுகைகளில் உள்ள பல்வேறு இடங்களை கவனித்து வந்தோம். பகல் நேரத்திலும் கோடை காலங்களிலும் கூட ஆற்றுப்பகுதி குளுமையான தன்மையுடன் இருப்பதை அறிந்தோம்.

நகர்ப்புறம் அல்லாத பிற பகுதிகளிலும் கூட, மழையளவு குறைவான இடத்தில் மழையளவை கூட்டியும், மழையளவு அதிகமுள்ள இடங்களில் மழையளவை குறைத்தும், மரங்கள் மழையளவை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மழையளவை அதிகரித்தல்: ஆறுகளின் ஓரங்களில் மரங்கள் அமைந்திருப்பதால் உட்புற மாநிலங்களில் மழையளவு குறித்து ஒரு ஆய்வறிக்கை ஆராய்கிறது. அதன்படி, “வனப்பகுதி அல்லாத இடங்கள் கடலிலிருந்து தொலைவில் அமையும்போது மழையளவு குறைவாக உள்ளது. இதற்கு மாறாக அங்கு மரங்கள் சூழ்ந்திருக்கும்போது மழையளவு குறைவது இல்லை. இது பசுமைப் பரப்பு வளிமண்டல சுழற்சியிலும், நிலங்களின் நீர் சுழற்சியிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பதை காட்டுகிறது. உலக அளவில் பாலைவனமாதல் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு மரங்கள், நல்ல தீர்வாக இருக்கும் என்பதை இது பரிந்துரைக்கிறது.

உதாரணத்திற்கு, அமேசான் மழைக் காடுகளின் பசுமைப் பரப்பு, தாங்களே தங்களுடைய பருவமழை காலத்தை நிர்ணயிக்கிறது! இது போல் இந்தியாவிலும் நிகழ்கிறது. IIT மும்பையின் சமீபத்திய ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில், காடுகள் அழிப்பு, கோடை கால மழையளவை வெகுவாக குறைத்திருப்பது தெரிகிறது. அந்த ஆய்வின் தலைவர் கூறுகையில், “எங்கள் ஆய்வில், நிலங்களை கையாளும் விதத்தில் மாறுபாடு மற்றும் நிலங்களின் பசுமைப் பரப்பு ஆகியவை பருவமழை அளவை பாதிப்பது தெரியவருகிறது. இந்நிலையை மாற்றுவது நம் கைகளிலே உள்ளது. ஏனென்றால் இந்த காரணிகளால் தான் கங்கை நதியின் நிலப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளின், மழையளவில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது உண்மையிலேயே ஒரு அபாய எச்சரிக்கையாகும்.” மழைப்பொழிவின் மறுசுழற்சி அல்லது பசுமைப் பரப்பால் உண்டாகும் மழைப்பொழிவு ஆகியவை ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வட இந்தியா (கங்கை பகுதி) மற்றும் வடகிழக்கு இந்தியாவின் மழைப்பொழிவில் 20-25% வரை தீர்மானிக்கிறது என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

மரங்கள், நீர் ஆவியாகி வளிமண்டலத்தில் சேர்வதற்கு ஆரோசல்ஸ் எனப்படும் மிக சிறிய நீர்த்துளியை வெளியிடுகிறது. இது அந்த பகுதியில் தேவையான மழைப்பொழிவை கொண்டு வருகிறது.

மழையளவு குறைதல்: மழையளவு குறைவது என்பது ஒரு நல்ல விஷயம் இல்லை தான். ஆனால் மாறிவரும் சீதோஷ்ண நிலை பருவகாலம் தவறிய மழைப்பொழிவு மற்றும் அதிகப்படியான மழை மற்றும் வறட்சியை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், வருடத்திற்கு சுமார் 0.1-1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கிறது. மழை பெய்யக்கூடாத சமயத்தில் மழை பெய்கிறது; மழை தேவையான நேரத்தில் மழை பெய்வதில்லை! மரங்கள் நிலப்பரப்புகளின் மேற்புறத்தில் குறைவான வெப்பநிலையை வைத்திருக்க உதவுவதால், அதன்மூலம் மழையளவு வெகுவாக சீராகிறது.