எழுத்துப் போட்டி

இது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும். - சத்குரு

நம் நதிகள் அழிந்து வருகின்றன

இந்திய ஆறுகள் தீவிரமான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. மக்கள்தொகைப் பெருக்கம் தரும் அழுத்தம், தொழில் வளர்ச்சி காரணமாக நமது வற்றாத நதிகளெல்லாம் இப்போது பருவகால நதிகளாகிவிட்டன. பல ஆறுகள் ஏற்கனவே இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. வெள்ளப்பெருக்கம் மற்றும் வறட்சி அதிகரிக்கின்றது, மழைகாலத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதும் மழைகாலம் முடிந்ததும், மறைந்து போவதும் அடிக்கடி நிகழ்கின்றன.

“நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” நமது நதிகளுக்கு புத்துயிர் ஊட்ட ஒரு தேசம் தழுவிய விழிப்புணர்வு இயக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. சத்குருவின் சிந்தனையில் உருவான இந்த இயக்கம், நாடு முழுவதிலுமிருந்து பலரது ஆதரவை பெற்றுள்ளது. இந்த இயக்கம் வெற்றிபெற, இளைஞர்கள் இதை முன்னெடுத்து நடத்தவேண்டும். ஒரு செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல, கலை ஒரு சக்திவாய்ந்த ஊடகமாய் விளங்குகிறது. ஆகையால், உங்கள் படைப்பாற்றலை பெருக்கெடுத்து ஒடவிடுங்கள் நம் நாட்டு மக்களுக்கு நமது ஆறுகள் படும் அல்லல்களை தெரியப்படுத்துவோம்.

போட்டி

தலைப்பு
இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளை காப்போம்

விளக்கம்
40 வார்த்தைகளில், நம் நதிகளின் முக்கியத்துவம் பற்றியும் அதனை அவசரகதியில் காப்பதற்கான தேவை குறித்தும் எழுதவும்.

பங்கேற்க:
எழுத்தாற்றல் போட்டியில் பங்கேற்க உங்கள் பள்ளி விரும்பினால், தயவுசெய்து உங்கள் பள்ளியிலிருந்து தகுந்த அதிகாரி ஒருவரை இந்த schools@rallyforrivers.org இமெயிலிற்கு தொடர்பு கொள்ளச் சொல்லவும்

தீர்ப்பிற்கான அளவுகோல்:
பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் இணையதளத்தில் வாக்களிப்புக்காக திறக்கப்படும்.

  • ஒரு வகுப்பிற்கு ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க, 5, 6, 7 என வகுப்பிற்கு ஒன்றென, 3 நுழைவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும், 3 வெற்றியாளர்களை நீதிபதிகள் கொண்ட குழு தேர்வுசெய்யும். சத்குரு மற்றும் பிரபலங்களின் முன்னிலையில் நடைபெறும் விழாவில் இந்த வெற்றியாளர்கள் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் வெற்றிபெறும் அணிகள், தேசிய போட்டியில், ஆன்லைன் ஓட்டுகள் பெறுவதற்காக பங்கேற்பார்கள். ஆன்லைனில்பெ றப்படும் ஓட்டுகளின் அடிப்படையில், 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
போட்டியின் நிறைவு தேதி
Sep 27, 2017

பரிசுகள்

  • ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெறுவோருக்கு கேமலின் வழங்கும் Camlin Mechanical Pencil
  • மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசு.
  • தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு.
  • மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கள் படைப்பாற்றலுக்கு பட்டை தீட்டும் வண்ணம், ஈஷா யோக மையத்தில், ஒரு முன்னணி எழுத்தாளருடனான வொர்க் ஷாப்பில் பங்கேற்கும் வாய்ப்பும் உண்டு
போட்டியின் நிறைவு தேதி
Sep 27, 2017

Submit Your Creative Writting

Namaskaram , Please enter the following details for your submission

Please check errors on form submissions
All Fields Are Manditory
Supported file formats: JPEG/JPG/PNG Size: 300kb

Creative Writing Contest Prize Winners

5th Standard Arshia Sharma
Arshia Sharma The Elisabeth Gauba School - Delhi.
7th Standard Pravin Christopher
Pravin Christopher NPS International School - Tamil Nadu.
6th Standard Abhimanyu Pant
Abhimanyu Pant NPS International school - Tamil Nadu.

போட்டிக்கான விதிமுறைகள்

  • இந்தப் போட்டி பள்ளி வளாகத்தில், Kokuyo Camlin, நதிகளை மீட்போம் அணியினர் முன்னணியில் நடைபெறும்.
  • 5, 6, 7ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் மட்டுமே இதில் பங்கேற்கலாம்.
  • எழுத்துப் படைப்பு 40 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். போட்டிக்கான காலநேரம் 15 நிமிடங்கள்.
नदी अभियान प्रतियोगिता
x