நதிகளை மீட்போம் மொபைல் செயலி

உயிர்வாழத் தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று – நீர். நம் முக்கியமான நீர் ஆதாரமான நதிகள் இன்று பேரழிவினை சந்தித்து வருகின்றன. ஒரே தலைமுறையில், ஜீவநதிகள், பருவகால நதிகளாய் மாறிவருகின்றன. சிற்றாறுகள் பல மறைந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையை மாற்ற நாம் தற்போது செயல்படாவிட்டால், கையறுநிலையில், பூசலில் தங்களை விட்டுச் சென்றதாய் வரும் தலைமுறை சொல்லும்.

சமுதாயத்தின் அனைத்து தரப்பினரிடமும், அரசிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துரித நடவடிக்கையை நோக்கி இயங்கச் செய்ய, சத்குரு அவர்கள் “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” விழிப்புணர்வு இயக்கத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளை காக்க ஆதரவளியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு மிஸ்டு கால் மட்டுமே 8000980009 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்.