Slide 1
RFR-pilot-project
Slide 2
Slide 3
Sadhguru MH CM VAn Mahotsav DPR
previous arrow
next arrow

நதிகள் மீட்பு இயக்கம் என்றால் என்ன?

நதிகள் மீட்பு இயக்கம் என்பது, இந்தியாவின் உயிர்நாடிகளைக் காப்பதற்கான ஒரு இயக்கம். வேகமாக வற்றிவரும் இந்திய நதிகளுக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில், செப்டம்பர் 3ம் தேதியன்று சத்குரு இவ்வியக்கத்தை துவக்கிவைத்து, மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 16 மாநிலங்கள் வழியாக 9300 கிமீ பயணம் செய்தார்.

180ற்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து, பொதுமக்களின் ஆதரவைப் பெற்று, வரலாறு காணாத மாபெரும் மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக இது மாறியது. 16.2 கோடி மக்களின் ஆதரவுடன், இன்று உலகிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக விளங்குகிறது.

இந்திய நதிகளைக் காக்க ஒரு விரிவான தீர்வை நதிகள் மீட்பு இயக்கம் வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் திட்டமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க பொருளாதார பலன்கள் தருவதால், அதன் அமைப்பில் தனித்துவமானது.

விழிப்புணர்வு உருவாக்கும் பயணத்தின் நிறைவாக, 2017 அக்டோபர் 2ம் தேதி, “இந்திய நதிகளின் புத்துணர்வு”க்கான கொள்கை வரைவுத் திட்ட பரிந்துரைகளை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களிடம் சத்குரு ஒப்படைத்தார்.

விரிவான ஆய்வுகள், மற்றும் களத்தில் இறங்கி செயல்படுவது மூலம் வேகமான தீர்வுக்கான பரிந்துரைகளை செயல்படுத்துவதில், நதிகள் மீட்பு இயக்கம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல ஆறுகளை ஆராய்ந்து இருக்கிறோம். (100க்கும் மேற்பட்ட) ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உதிக்கின்றன. ஓடைகளின் வடிநில பகுதிகளில் எங்கெல்லாம் குறைந்தது 60% நிலப்பரப்பிற்கு நாட்டு ரக மரங்கள் இருக்கிறதோ, அந்த ஓடைகளிலெல்லாம் 12 மாதமும் போதுமான அளவு நீர் ஓட்டம் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

Rally For Rivers

பேராசிரியர் இராமசந்திரன்

சுற்றுச்சூழல் அறிவியல் மையம், ஐ.ஐ.எஸ்.சி, பெங்களூரு

இனியும் பொறுப்பில்லாமல் இயற்கையை கையாண்டால் என்ன நடக்கும்? நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவிற்கு பேரழிவை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம் என்று தோன்றுகிறது. உணவில்லாமல் மக்கள் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒருநாள், அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்கள் தாண்டி இருக்கமுடியுமா?

Rally For Rivers

ஆனந்தி ஐயர்

தலைவர், ஃப்ராவுநோஃபர் - ஜிசல்ஷாஃப்ட், இந்தியா

மைல்கற்கள்

அறிவிப்புப் பலகை

இந்திய நதிகளுக்கு புத்துயிரூட்டல்

Download

நதிகள் மீட்பு இயக்கத்தை செயல்படுத்துதல்

எதையும் தவறவிடமாட்டேன்

நதிகள் மீட்பு இயக்கத்தின் முன்னேற்றம் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் செய்திமடலுக்கு பதிவுசெய்யுங்கள்

முன்னேற்ற நாளேட்டைக் காண்க

x