Join Us And Watch Yaksha Live Performances

Yaksha 2021 Archives

திரு. சந்தீப் நாராயண், கர்நாடக சங்கீதம்

இந்துஸ்தானி குரலிசை, திருமதி. கௌஷிக் சக்ரபோர்த்தி

detail-seperator-icon

யக்ஷா -பாரம்பரிய இசை நாட்டிய திருவிழா

ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 முதல் 10 வரை (மஹாசிவராத்திரிக்கு முன்பு)

இந்திய பாரம்பரிய கலைகளின் புனிதம் மற்றும் வகைகளை பாதுகாத்து வளரச்செய்யும் முயற்சியாக, ஆண்டுதோறும் ஈஷா அறக்கட்டளை யக்க்ஷா விழாவை கொண்டாடி வருகிறது. இந்த மூன்று நாள் விழாவில் பிரசித்தி பெற்ற கலைஞர்களின் பாரம்பரிய கலை, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அறங்கேறுகின்றன. இந்திய புராணங்களில் இடம்பெற்றுள்ள வின்னுலகக் கலைஞர்களைக் குறிக்கும் பெயரைக் கொண்டுள்ள யக்க்ஷா நிகழ்ச்சி, போற்றிக் கொண்டாடப்படும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் வழங்க, கலைப்பிரியர்கள் ரசிப்பதற்கான ஒரு மேடையை வழங்குகிறது.

detail-seperator-icon

2021 கலை நிகழ்ச்சிகள்

இவ்வாண்டு மார்ச் 8 முதல் 10 வரை யக்க்ஷா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையவழியாக நேரலையில் இலவசமாக ஒளிபரப்பப்படும்.

நாள் 1 – மார்ச் 8, 2021

திருமதி. கௌஷிக் சக்ரபோர்த்தி

இந்துஸ்தானி குரலிசை

திருமதி. கௌஷிக் சக்ரபோர்த்தி, இந்திய பாரம்பரிய வாய்ப்பாட்டு கலைஞராவார். சங்கீத் ரிசர்ச் அகாடமியில் இசையைபயின்று, கயல் மற்றும் நவீனமும் பாரம்பரியமும் கலந்த தும்ரி பாடல்கள் பாடும் இவர், பாட்டியாலா பாணி இசையில் புகழ்பெற்றவராவார்.இவர் 2005ம் ஆண்டில் ஆசியா-பசிபிக் பிரிவுக்கு வழங்கப்பட்ட BBCரேடியோ 3 விருதைப் பெற்றுள்ளார்.

நாள் 2 – மார்ச் 9, 2021

திரு. சந்தீப் நாராயண்

கர்நாடக சங்கீதம்

இன்று கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞராக திரு. சந்தீப் நாராயண் திகழ்கிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கர்நாடக இசையில் முழுநேரம் ஈடுபடுவதற்காக இந்தியா வந்துள்ள முதல் கலைஞரான சந்தீப் நாராயண், வளரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமாகத் திகழும்விதமாக வேகமாக வளர்ந்துவரும் கலைஞராவார். இவர் சங்கீத் நாடக் அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார், கலா ரத்னா, யுவ புரந்தரா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நாள் 3 – மார்ச் 10, 2021

ஈஷா சம்ஸ்கிருதி

பரதநாட்டியம்

ஈஷா சம்ஸ்கிருதி, சத்குரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக துவங்கப்பட்டு, குழந்தைகளுக்கு ஓர் அர்ப்பணிப்பாக இயங்கிவருகிறது. குழந்தைகள் தங்களுக்குள்ளும் சுற்றியுள்ள உலகுடனும் இசைந்திருப்பதற்கும் மலர்வதற்கும் ஒரு அற்புதமான சூழ்நிலையை ஈஷா சம்ஸ்கிருதி வழங்குகிறது.

யோகப் பயிற்சிகள், இந்திய பாரம்பரிய கலைவடிவங்களான பரதநாட்டியம், பாரம்பரிய இசை மற்றும் தற்காப்புக் கலைகளாக களரிபயட்டு, குழந்தைகளின் உடல் மற்றும் மனதில் சமநிலையையும் உறுதியையும் வளர்க்கிறது. இந்த நுட்பமான கலை வடிவங்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், ஆன்மீக செயல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஆன்மீக ஆழத்தில் ஈடுஇணையற்ற சம்ஸ்கிருத மொழியும் அவர்களது கல்வியின் அங்கமாக விளங்குகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலமும் அடிப்படை கணிதமும் கற்றுத்தரப்படுகிறது.

detail-seperator-icon

யக்ஷா 2020 – ஒரு பார்வை

Hyderabad Brothers, Carnatic Classical Vocals

Kala Ramnath, Hindustani Classical Violin

Yaksha 2019 Archives

Kalapini Komkali, Hindustani Vocal Performance