logo
logo
தமிழ்
தமிழ்

சிவனை அறிந்திட உதவும் குருவாசகங்கள்! (Shiva Quotes in Tamil)

“ஆதியோகியாகிய சிவனிடம் இருந்துதான் யோகா தோன்றியது என்பதை இவ்வுலகம் அறிய வேண்டும்.” – சத்குரு

“அனைத்து மதங்களுக்கும் முன்தோன்றிய ஆதியோகியாம் சிவன், எந்நாட்டவருக்கும் பொருந்தும் விதமாய் வழங்கிய யோகமுறைகளை கொண்டாடிட, 112 அடி உயரத்தில் ஒளிவீசிடும் இந்த ஆதியோகி முகம்.” – சத்குரு

“ஆதியோகி ஒரு குறியீடு, ஒரு சாத்தியம், உங்களை மற்றொரு பரிமாணத்திற்கு உயர்த்தி, உங்கள் வாழ்வை நீங்களே உருவாக்கிக் கொள்ள ஊற்றாய் இருக்கும் ஒரு கருவி.” – சத்குரு



“மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்கான வழிமுறைகளை, அனைத்து காலத்திற்கும் பொருந்தும்படியாக வழங்கியதே ஆதியோகியின் தனிச்சிறப்பு” – சத்குரு



“ஆதியோகி உருவாக்கிய ஞானம்தான், இந்த பூமியில் ஆன்மீகம் என்று நீங்கள் அழைக்கக்கூடிய அனைத்திற்கும் முதுகெலும்பாய்த் திகழ்கிறது.” – சத்குரு



“யோகக் கலாச்சாரத்தில் சிவன், முதல் யோகியாகவும், அறிதல் மற்றும் முக்திக்கான வழியை அளிப்பவராகவும் அறியப்படுகிறார்.” – சத்குரு



“பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சக்தி சிவம்தான். சிவா என்றால், எது இல்லையோ அது. அதுதான் இங்கு இருக்கும் அனைத்திற்கும் ஆதாரமானது.” – சத்குரு



“உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும், சிவன் எப்போதும் உங்களுக்கு உகந்தவராக இருக்கிறார் - அதனால்தான் அவன் மகாதேவன். சிவன் உங்கள் சொற்ப பிரச்சனைகளை தீர்ப்பவனல்ல, உங்களுக்கு மோட்சத்தை வழங்குபவன்.” – சத்குரு



“கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிறார்கள். ஏதோ ஒன்றாக இருப்பது ஏதோவொரு இடத்தில் மட்டும்தான் இருக்கமுடியும். எதுவுமில்லாததாக இருப்பது எங்கும் இருக்கமுடியும். சிவன் என்றால் எதுவுமில்லாதது, 'எது இல்லையோ அது.' ” – சத்குரு



“நாம் சிவனை சுயம்பு என்கிறோம் - அதாவது பூர்வீகம் இல்லாதவன். தந்தையில்லை, தாயில்லை, ஏனென்றால் மரபுவழி என்றாலே, நடப்பதே மீண்டும் மீண்டும் சுழற்சியாக நடக்கிறது என்று அர்த்தம். சுழற்சியாக நடக்கிறதென்றால் நீங்கள் ஒரே வட்டத்தைச் சுற்றி வருகிறீர்கள், நீங்கள் எங்கும் சென்றடையாமல் இருக்கிறீர்கள்.” – சத்குரு



“சிவன், அவனது சக்தி உச்சத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும் விதமாக, தன் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பு படமெடுக்கும் விதமாக சித்தரிக்கப்படுகிறான்.” – சத்குரு



“சிவன் அங்கு மேலே இருக்கும் கடவுளல்ல, இங்கு உயிர்வாழும் ஓர் இருப்பு.” – சத்குரு



“காலபைரவர், காலத்தின் வடிவான தனித்துவமான சிவன் வடிவமாவார்.” – சத்குரு



“சிவன் எங்கும் இருக்கிறான். நீங்கள் இருந்தால் அதனை நீங்கள் உணரமுடியாது. நீங்கள் இல்லாவிட்டால் சிவம் மட்டுமே இருக்கிறது.” – சத்குரு



“லிங்கம் இன்றி சிவன் இல்லை. லிங்கம் என்பது நாம் சிவம் என்றழைக்கும் எல்லையில்லா வெறுமைக்கான நுழைவாயில்.” – சத்குரு



“தியானலிங்கமும் மஹாசிவராத்திரியும் நாம் செய்யும் மற்ற விஷயங்கள் அனைத்தும் ஆதியோகிக்கு நம் நன்றியை வெளிப்படுத்தும் முயற்சிகளே. அவனின்றி நாம் இல்லை.” – சத்குரு



“நான் சிவனின் பக்தனில்லை. அவன் என் சரிபாதி கூட்டாளி. அவன் உறங்குகிறான், நான் உழைக்கிறேன்.” – சத்குரு



“நாம் எதை சிவன் என்கிறோமோ, அது பிரபஞ்சத்தின் பொருளல்லாத பரிமாணமாகும், அதுதான் அண்டத்தின் மிகப்பெரிய பரிமாணமாகும்.” – சத்குரு



“சிவனின் மகத்துவம் இதுதான்: நாம் யோகா என்றழைக்கும் பரிமாணத்தை அவன் முதல்முறையாக கற்றுக்கொடுத்து, படைப்புடன் சங்கமிக்கும் சாத்தியத்தை மனித வாழ்க்கைக்கு கொண்டுவந்தான்.” – சத்குரு



“நாம் ஆதியோகியை சிவன் என ஏன் அழைக்கிறோம் என்றால், சிவம் அல்லது 'எது இல்லையோ' அந்த பரிமாணத்தை அவன் கிரகித்துக்கொண்டான். 'எது இல்லையோ' அதற்கும், அதை கிரகிப்பவனுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.” – சத்குரு



“ஆதியோகியின் பணி, மனித விழிப்புணர்வுக்கு ஆற்றப்பட்டுள்ள மிகப்பெரிய பங்களிப்பாகும். அவன் பணி மக்கள் இதயங்களிலும் மனங்களிலும் உடல்களிலும் உயிர்வாழ வேண்டுமென விரும்புகிறோம். இந்த அறிவியலை மனிதகுலத்திற்கு நாம் உயிருள்ள சக்தியாக எடுத்துவர விரும்புகிறோம்.” – சத்குரு



“சிவனின் முதல் வடிவம், ஒளியின் தூணாக காசியில் நிறுவப்பட்டது.” – சத்குரு



“சிவனுக்கு, குறிப்பிட்ட சார்புகள் ஏதுமின்றி வெறுமனே நெருப்பாய் எரிபவர்களைப் பிடிக்கும்.” – சத்குரு



“எல்லையில்லாத வெறுமைதான் இந்த பிரபஞ்சத்திற்கே ஆதாரமானது, அதைத்தான் நாம் சிவா என்கிறோம்.” – சத்குரு



“சிவன் என்றால் தெய்வீகம் என்று நாம் சொல்லவில்லை, சிவன் என்றால் கடவுள் என்று நாம் சொல்லவில்லை, நாம் சிவன் என்றால் 'எது இல்லையோ அது' என்றோம்.” – சத்குரு



“சிவா என்றால் 'எது இல்லையோ அது.' இந்த பரந்துவிரிந்த வெறுமையின் மடியில்தான் படைப்பு நிகழ்ந்துள்ளது.” – சத்குரு



“ஆதியோகி ஒரு யோகி, ஆனால் அவன் ஒரு எல்லையில்லா சாத்தியமாக இருப்பதால் நாம் சிவன் என்றழைக்கிறோம். அவன்தான் எல்லையில்லாத் தன்மையின் விதையாவான்.” – சத்குரு



“அனைத்தும் வெறுமையிலிருந்து தோன்றி வெறுமைக்குள் மறைகிறது. படைப்பு முழுவதற்கும் ஆதாரமான இந்த வெறுமையைத்தான் நாம் சிவா என்கிறோம்.” – சத்குரு



“சிவன் அர்த்தநாரி - அதாவது அவன் ஆண்பாதி பெண்பாதியானவன். பெண்தன்மையின் பரிமாணமின்றி அவன் யோகியாக இருக்கமுடியாது.” – சத்குரு



    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

சிவனின் ஏழு தன்மைகள் என்னென்ன?